நடிகரின் ஓவர் ஆட்டம்.. ஷூட்டிங் ஸ்பாட்டில் காதலியுடன் ஈருடல் ஓருயிர் என ரொமான்ஸ்!
சென்னை: நடிகர்கள் கமிட்டாகும் படங்களில் தங்களது படத்தின் தயாரிப்பாளர்களின் தலையில் மொய் எழுதி விடுவது சகஜமான ஒன்றுதான். தயாரிப்பாளர்களும் பல்லைக் கடித்துக் கொண்டு வேறு வழி இல்லாமல் அந்த செலவையும் ஏற்றுக் கொள்வார்கள். அதில் ஏதாவது சுணக்கம் காட்டினால், உடனே நடிகர்கள் தயாரிப்பாளர் மீது கோபத்தைக் காட்டிவிட்டு, படத்திற்கு ஒத்துழைப்பு வழங்காமல் இருந்த பல கதைகள் தமிழ் சினிமாவில் நடைபெற்றுள்ளது.
அப்படியான ஒரு கதைதான் சமீபத்தில் ஒரு படப்பிடிப்புத் தளத்தில் நடைபெற்றுள்ளது. இந்த நடிகர் இப்போதுதான் வளர்ந்து வரும் நடிகர். இவரது படங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படியான நிலையில் நடிகர் ஓவர் ஆட்டம் போடத் தொடங்கியுள்ளாராம்.

அதாவது நடிகர் படப்பிடிப்பு தளத்திற்கு வரும் போது, தனது காதலியுடன் தான் வருகிறாம். நடிகருக்கு கேரவன் இருந்தாலும், படப்பிடிப்புத் தளத்திலேயே காதலியுடன் ஓவர் நெருக்கமாக இருக்கிறாராம். இதனைப் பார்த்த இயக்குநரும் தயாரிப்பாளரும் என்ன செய்வது எனத் தெரியாமல் நடிகரை எப்படி தங்களது வழிக்கு கொண்டு வருவது எனத் தெரியாமல் முழுத்துக் கொண்டு இருக்கிறார்களாம். குறிப்பாக நடிகரின் காதல் லீலைகள் அனைத்துமே 100 பேருக்கு முன்னிலையில் நடைபெறுகிறதாம். இதனால் நடிக்க கூப்பிட்டால் கூட காதலியுடன் கடலை போட்டுக்கொண்டு, 10 நிமிசம், 5 நிமிசம் என டைம் கேட்டுக் கொண்டு இருக்கிறாராம். இவராலே பல நேரங்களில் படப்பிடிப்புத் தளத்தில் வேலை செய்பவர்கள் செம கோபமடைந்துள்ளார்கள்.
இன்னும் சொல்லப்போனால் இதையெல்லாம் கேரவனுக்குள் வைத்துக் கொள்ளக் கூடாதா என புலம்பியதை அடுத்து, நடிகரும் அவரது காதலியும் தங்களது ஈருயிர் ஓருடல் அன்பை கேரவனுக்குள் தொடர்ந்துள்ளார்கள். இப்போது கேரவனுக்குள் நுழைந்தாலே கதவையே திறப்பதில்லையாம் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து கொண்டே அவருக்கு போன் செய்து ஷார்ட்க்கு கூப்பிடுகிறார்களாம். இதோ வருகிறேன் எனக் கூறும் நடிகர் கிட்டத்தட்ட அரை மணி நேரம் கழித்துதான் கேரவனில் இருந்தே கீழே இறங்கி வருகிறாராம். நடிகரின் காதல் களியாட்டங்களுக்கு நடுவே எப்படி படத்தை முடிப்பது எனத் தெரியாமல் இயக்குநரும் தயாரிப்பாளரும் புலம்பி வருகிறார்களாம். எல்லாம் தெரிந்தும் நடிகர் தனது ஆட்டத்தை குறைப்பதாக தெரியவில்லை எனவும் படக்குழுவினர் ஆதங்கப்பட்டு வருகிறாகளாம்.


Click it and Unblock the Notifications











