கதையே வேண்டாம்.. அந்த நடிகை மட்டும் போதும்.. இயக்குநரை ஏற்பாடு செய்யச் சொன்ன வாரிசு நடிகர்!
சென்னை: அண்மையில் மலையாள சினிமா உலகில் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில், அமைக்கப்பட்ட குழு மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு நடைபெறும் பாலியல் தொல்லைகள் பாலியல் அத்துமீறல்கள் குறித்து ஆய்வு செய்து ஆதரங்களுடன் அறிக்கை வெளியிட்டது. தமிழ் சினிமா உலகிலும் இது போல கமிட்டி அமைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தாலும் அதற்கான நடவடிக்கைகள் தீவிரமான முறையில் நடக்கவில்லை. இப்படியான நிலையில்தான் சினிமா உலகில் கிசு கிசு ஒன்று வேகமாக பரவி வருகின்றது.
அதாவது, வாரிசு நடிகர் ஒருவர், தமிழ் சினிமாவில் தனக்கு நிலையான இடத்தினை உருவாக்கிக் கொள்ள முயற்சித்தாலும், சைடு கேப்பில் உடன் நடிக்கும் நடிகைகளை தனியே சந்திப்பது தனி அறையில் சந்திப்பது என்பதை வழக்கமாகவே செய்து வந்துள்ளார். தொடக்கத்தில் சில படங்களில் அமைதியாக இருந்த வாரிசு நடிகர், தனது படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க புதுமுகங்கள் வந்தால், அவர்களை முதலில் தனது ஹெஸ்ட் ஹவுஸ்க்கு அழைத்து பெர்ஷனலாக ஒரு மீட்டிங்கினைப் போடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அதாவது புது முகங்களிடம் சொல்வதே, ஜெஸ்ட் ஒரு மீட்டிங் தான் வாங்க என அழைப்பதும், அதன் பின்னர் நான் ஆபிஸில் இல்லை, கெஸ்ட் ஹவுஸில் இருக்கின்றேன், ஹெஸ்ட் ஹவுஸ்க்கு வந்துடுங்களேன் என பேச்சை மாற்றி ஹெஸ்ட் ஹவுஸ்க்கு அழைத்து,கொஞ்சம் அப்படி இப்படி பேசி, புது முக நடிகைகளை தனது ஆசைக்கு ஒத்துழைக்க வைத்துவிடுகின்றாராம். இதையே தொடர்ந்து சில நடிகைகளுக்குச் செய்து வர, இந்த விஷயம் திரைத்துறையில் பரவியுள்ளது.
ஹெஸ்ட் ஹவுஸ் மீட்டிங்: ஹெஸ்ட் ஹவுஸ் மீட்டிங் மட்டும் இல்லாமல், படப்பிடிப்புக்கு நடுவே, கேரவன் மீட்டிங் என படம் முடிவதற்குள் நடிகையை கசக்கிப் பிழிந்து விடுகின்றாராம். இதனால் இவரது படங்களில் நடிக்க, விவரம் தெரிந்த நடிகைகள் ஓ.கே. சொல்லாமல் தெறித்து ஓடுகின்றார்களாம். இதுமட்டும் இல்லாமல், அட்ஜெஸ்மெண்ட்க்கு ஓ.கே. சொல்லும் நடிகைகள் கூட, இவரது நடவடிக்கைகளைப் பார்த்து, படத்தில் கமிட் ஆவதை தவிர்த்து வருகின்றார்களாம்.
அட்ஜெஸ்ட்மெண்ட்: இப்படியான நிலையில்தான், புதுமுக இயக்குநர் ஒருவர் இவரைச் சந்தித்து கதை சொல்லியுள்ளார். கதையெல்லாம் கேட்டுவிட்டு, கதாநாயகியாக யாரை நடிக்க வைக்க உள்ளீர்கள் எனக் கேட்க, இயக்குநரோ, தனது மனதில் இருந்த நடிகையின் பெயரைச் சொல்ல, வாரிசு நடிகரோ, அந்த நடிகையுடன் ஏற்கனவே நான் படம் பண்ணிட்டேன், எனவே எனக்கு இந்த நடிகை வேண்டாம். நான் சொல்லும் நடிகையை புக் செய்யுங்கள். அட்ஜெஸ்ட்மெண்ட்க்கும் ஓ.கே. சொல்லனும், எப்படியாவது நீங்க பேசி படத்தில் நடிக்க வெச்சுடுங்க, மிச்சத்த நான் பாத்துக்கறேன் எனக் கூறியுள்ளார்.
நடிகைதான் வேண்டும்: இதனைக் கேட்ட புதுமுக இயக்குநருக்கு பேரதிர்ச்சியாக இருந்துள்ளது. ஆனாலும் வாரிசு நடிகர், நான் சொன்ன நடிகையை புக் செய்தால் ஓ.கே. இல்லையென்றால் வேண்டாம். எனக்கு கதை கூட தேவையில்லை. அந்த நடிகை மட்டும் போதும் எனக் கூறியுள்ளார். இப்படி அந்த வாரிசு நடிகர் பேசுவார் என துளியும் எதிர்பார்க்காத இயக்குநர், இவரை வைத்து படம் பண்ணவே வேண்டாம் என முடிவெடுத்து, அங்கிருந்து கிளம்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications











