ஓவரா குடிச்சுட்டு வருவா.. கிட்ட வந்தாலே நாற்றம் அடிக்கும்.. நடிகையை ரெய்டு விட்ட நடிகர்!
சென்னை: திரையுலகில் போதைக் கலாச்சாரம் மிகவும் அதிகமாகிக் கொண்டே வருவதற்கு சாட்சி தான் அண்மையில் இரண்டு நடிகர்கள் கைது செய்யப்பட்டது. இது மட்டும் இல்லாமல் இந்த விவகாரத்தில் பல நடிகர்களுக்கும் முன்னணி நடிகைகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் பேச்சுகள் அடிபட்டு வருகிறது. இந்த வழக்கு விசாரணை முழுவதுமாக முடியும் போது பல நடிகர்கள் நடிகைகள் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் ஒருவர் நடிகையை ரெய்டு விட்டுள்ளார்.
அதாவது, இரவு நேரங்களில் நடக்கும் பார்ட்டியில் நடிகர்களும் நடிகைகளும் கலந்து கொள்வது திரைத்துறையில் சகஜமானதுதான். அண்மையில் கூட பல நடிகைகள் கூடிய பார்ட்டில் பிரபல நடிகர் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவியது. இப்படி இருக்கையில் நடிகை ஒருவர் இந்த இரவு பார்ட்டிக்குச் சென்றாலே ஓவர் குடி குடிப்பாராம். அந்த நடிகையின் குடியை மூன்று பேர் சேர்ந்து கூட குடிக்க முடியாதாம். அந்த அளவுக்கு நடிகை குடி நடிகையாக இருந்து வருகிறாராம்.
இந்த நடிகை இரவில் எப்போதுமே கொஞ்சம் குடித்து விட்டு தான் உறங்க போவாராம். அவ்வப்போது அளவுக்கு மீறி குடித்து விடுவாராம். இதனால் காலையில் படப்பிடிப்பு தளத்திற்கு தாமதமாகத்தான் செல்வாராம் நடிகை. அப்படி செல்லும்போது நடிகை மற்ற நடிகர்களுடன் மிக அருகில் நின்று நடிக்கும் காட்சிகளில் அன்றைய தினங்களில் மட்டும் நடிக்க மாட்டாராம். காரணம் நைட்டு நடிகை குடித்த ஓவர் குடியின் துர்நாற்றம் சக நடிகர்களுக்கு தொந்தரவு கொடுக்க கூடும், இது மட்டும் இல்லாமல் நடிகை குறித்து கேவலமாக நினைக்கவும் வாய்ப்புகள் அதிகம் என்பதால்தானாம்.

திருந்துவது போல நடித்த நடிகை: இப்படி இருக்கையில் படத்தின் பாடல் காட்சிகளில் நடிகை நடித்துக் கொண்டு இருந்த காலகட்டம். அதுவும் மிகவும் ரொமான்டிக் பாடல் காட்சி படமாக்கப்பட்டு கொண்டு இருந்துள்ளது. முதல் நாளே நடிகை ஓவர் குடி துர்நாற்றத்துடன் படப்பிடிப்பு தளத்திற்கு வந்துள்ளார். இதனால் நடிகர் செம அப்செட் ஆகி, நடிகைக்கு அட்வைஸ் செய்து அனுப்பி உள்ளார். அடுத்த இரண்டு நாட்கள் நடிகை எந்த விதமான குடியும் இல்லாமல், ஒழுங்காக படப்பிடிப்புக்கு வந்துள்ளார். இதனால் நடிகரும் பரவாயில்லை என நினைத்துள்ளார்.
ரெய்டு விட்ட நடிகர்: ஆனால் பாடல் காட்சியின் கடைசி நாளில் நடிகை தனது பழைய நிலைக்கு திரும்பி உள்ளார். அதாவது ஓவராக குடித்துவிட்டு, அந்த துர்நாற்றத்துடன் நடிக்கச் சென்றுள்ளார். இதனால் நடிகர் நடிகையை காட்டமாக திட்டியுள்ளார். படப்பிடிப்புத் தளத்தில் திட்டியது மட்டுமல்லாமல், பல நடிகர்களும் நடிகைகளும் கலந்து கொண்ட பார்ட்டியில், அவளா.. நைட்டு கண்ட கருமத்தையும் குடிச்சிட்டு காலையில அந்த நாத்தத்தோடயே வருவா.. இனிமேல் அவ கூட சேர்ந்து நான் டூயட் பாட்டுல எல்லாம் ஆடமாட்டேன்" எனக் கூறி நடிகையின் மானத்தையே வாங்கிவிட்டுள்ளாராம்.


Click it and Unblock the Notifications











