விவாகரத்தான பெண்களை குறிவைக்கும் நடிகர்.. மூன்று குழந்தைகளுக்கு தகப்பன் ஆகியும் அடங்கமாட்டிங்கறாரே!
சென்னை: இந்த நடிகர் உத்தம புருஷனாக தன்னைக் காட்டிக் கொண்டிருந்தவர். ஆனால் நடிகரின் நடவடிக்கைகளை கவனித்தவர்கள், எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும்னு யாருக்குத் தெரியும் என்று பேசும் அளவுக்கு நடிகர் ரொம்பவும் தில்லாலங்கடி வேலை பார்த்து வருகிறாராம். அதுவும் மூன்று குழந்தைகளுக்கு தகப்பன் ஆகியும் நடிகர் அடங்காமல் சுற்றி வருகிறார் என்பதுதான் பேச்சாக உள்ளது.
அதாவது இந்த நடிகர் தனது சொந்தத்தில் நன்றாக சொத்துபத்துடன் உள்ள பெண்ணை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமணத்தின் போது நடிகராக கூட உருவெடுக்க வில்லை. இப்படி இருக்கும்போது நடிகராக உருவெடுத்த பின்னர், இவர் தனது கைவசம் வைத்திருந்த மற்றொரு தொழிலை பரப்பினார். இதனால் அவருக்கு பிரபலங்களின் தொடர்புகள் கிடைத்தது. குடும்பத்தை பூர்வீகத்தில் விட்டுவிட்டு, சென்னையில் ஐக்கியமாகி விட்டாராம் நடிகர்.
சென்னை வீடு சும்மாதானே இருக்கிறது இந்த வீட்டிலும் ஒருவர் வந்து குத்து விளக்கு ஏற்றினால் நன்றாக இருக்குமே என்று, தாராளமாக யோசித்த நடிகர், அதற்கு வீசிய வலையில் எல்லாம் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர்களாகத்தான் வந்து விழுந்துள்ளார்கள். இதில் என்ன கூத்து என்றால், இப்படி விவாகரத்து ஆனவர்கள் வந்தது நடிகருக்கும் கொஞ்சம் சௌகரியமாக போய்விட்டதாம். அதாவது, விவாகரத்து ஆனவர்களை எப்போது வேண்டுமானாலும் கழட்டி விட்டு விட முடியும் என்று நினைத்துக் கொண்டு இந்த வேலைகள் ஈடுப்பட்டுள்ளார்.

ஓவர் ஆட்டம்: ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒவ்வொரு பெண்ணை குத்து விளக்கு ஏற்ற அழைத்து வந்து விடுவாராம். இப்படி இருக்கையில் அவர்களுக்கு இடையிலான உறவில் மேற்கொண்டு வாரிசுகள் வளராமல் இருக்க நடிகர் சிலபல மாத்திரைகளை உட்கொள்ளுவாராம். இது அந்த விவாகரத்தான பெண்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டாராம். ஏற்கனவே இரண்டு வாரிசுகள் திருமண உறவில் உள்ளனர். மேற்கொண்டு வாரிசு வந்தால் சிக்கல் ஆகிவிடும் என்று நடிகர் ரொம்பவும் உஷாராக இருந்துள்ளார்.
நடிகர் அடிக்கும் கூத்து: இப்படி இருக்கும்போது சில மாதங்கள் அவர் மாத்திரைகளை கைவிட்டுள்ளார். அதன் பின்னர் மற்றொரு விவாகரத்தான பிரபலத்துடன் நெருங்கிப் பழகி உள்ளார். இப்படிப் பழகியதில் விவாகரத்தான பெண் பிரபலம் கர்ப்பமாகவே நடிகர் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறாராம். இதன் பின்னராவது நடிகர் அடங்குவார் என்று பார்த்தால், கர்ப்பமான பிரபலத்தை கழட்டி விட்டுவிட்டு, தற்போது அடுத்த கட்டத்திற்கு வலை வீச, ஆரம்பித்துள்ளாராம் நடிகர். நடிகரின் இந்த நடவடிக்கைகளை கேள்விப் பட்டவர்கள், மூன்று குழந்தைகளுக்கு தகப்பன் ஆகியும் நடிகர் அடங்கமாட்டிங்கறாரே என்று பேசி வருகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











