நடிகருக்கு செக் வைத்த தயாரிப்பாளர்.. வட்டிக் கணக்கு கேட்டு கொடுத்த தொல்லை.. நடிகர் எடுத்த முடிவு
சென்னை: இந்த நடிகர் தமிழ் சினிமா உலகில் ஒரு பல்வித்தைக்காரர் என்றே கூறலாம். இதனாலோ என்னவோ பல தயாரிப்பாளர்களுக்கு இவரை பிடித்துப் போகிறது. அதற்கு ஒரு ஸ்பெஷல் காரணமும் உள்ளது. அதாவது படத்தின் கிராஃப்ட் எங்காவது பிசகினாலும் அதை குறிப்பிட்டுச் சொல்லி விடுவார். பாடல்கள் எழுதுவார், பாடுவார், எனவே கம்மி பட்ஜெட்டில் இந்த வேலைகளை எல்லாம் செய்துவிட முடியும் என்று நம்புவார்கள்.
நடிகருக்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் தயாரிப்பாளர் கொடுத்த அட்வான்ஸ்க்கு நடிகர் படம் இதோ நடித்துக் கொடுக்கிறேன், அதோ நடித்துக் கொடுக்கிறேன் என்று பல ஆண்டுகளை ஓட்டிவிட்டார். இப்படி இருக்கையில் நடிகர் மீது புகார் கொடுத்து நடிகரை தன் வழியில் கொண்டு வந்துவிட்டார் தயாரிப்பாளர்.

வட்டி பாட்டு: இதில் என்ன விஷயம் என்றால் நடிகர், தயாரிப்பாளர் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை திருப்பித் தருகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் தயாரிப்பளரோ, அட்வான்ஸை திருப்பித் தருவது என்றால் வட்டியுடன் திருப்பிக் கொடுங்க என்று கூறியுள்ளார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத நடிகரோ, சார் இன்றைக்கு என்னோட சம்பளம் நீங்க அட்வான்ஸ் கொடுத்த போது இருந்ததை விட அதிகம். எனவே நீங்க அதையும் மனசுல வச்சுக்கோங்க என்று கூறி உள்ளார்.
நடிகர் எடுத்த முடிவு: இதற்கு தயாரிப்பாளரோ, தம்பி நீங்க எனக்கு படமே பண்ணவேண்டாம், நான் கொடுத்த பணத்தை வட்டியுடன் கொடுத்துவிடுங்கள் என்று கூறியுள்ளார். இவரு என்னடா வட்டி பாட்டு பாடுறாரே என்று நடிகர் எடுத்த முடிவு தான் பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. அதாவது நடிகர் நடிப்பில் வெளியாகி பல ஆண்டுகள் ஆகியும் ஒரு படத்தின் இரண்டாம் பாகத்திற்கு தென்னிந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இதில் என்ன விஷயம் என்றால் அந்த படத்தின் முதல் பாகத்தின் தயாரிப்பாளர் அந்த நடிகர் தான். எனவே நடிகர் தயாரிப்பாளரிடம் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் தயாரிப்பாளர் உரிமையை உங்களுக்கு கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் அதில் இணை தயாரிப்பாளராகவும் நடிகர் செயல்படுவேன் என்று தெரிவித்துள்ளார். அதற்கு தயாரிப்பாளரும் சரி என்று சொல்லி உள்ளாராம். இது குறித்த பேச்சுதான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படும் பரபரப்பான விஷயங்களில் ஒன்றாக உள்ளது.


Click it and Unblock the Notifications











