போதையின் பாதையை கைவிட்ட தோஸ்த் நடிகர்.. குடும்பம் தான் முக்கியம்னு மனசு மாறிட்டாராம்

By Staff

சென்னை: இந்த நடிகர் 2000களின் தொடக்கத்தில் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர். அறிமுகமான படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இது மட்டும் இல்லாமல் பெண்கள் மத்தியில் நடிகருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவானது. மெல்ல மெல்ல வளர்ந்து வந்த நடிகர் ஒரு கட்டத்தில் தவறான கதைகளை தேர்வு செய்து மார்க்கெட் இழக்கும் நிலைக்குப் போனார். ஆனால் இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் நடிகர் தொடர் தோல்விகளால் போதைக்கு அடிமையானவர்.

அதற்கு முன்னரே நடிகருக்கு போதைப் பழக்கம் இருந்தாலும் இந்த அளவுக்கு இருந்ததில்லையாம். இதில் நடிகரின் திருமணமே பெரும் பஞ்சாயத்துக்கும் போராட்டங்களுக்கும் சட்ட சிக்கல்களுக்கும் மத்தியில் தான் நடைபெற்றது. இப்படி இருக்கையில் நடிகரின் தகாத பழக்கங்களில் ஏற்பட்ட தகாத தொடர்புகள் அவரை போதை பொருள் சப்ளை செய்யும் நபராக மாற்றி உள்ளது.

இது குறித்து எப்படியோ மோப்பம் பிடித்த போதைத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடிகர் நடத்திய மிகப்பெரிய போதை விருந்துக்குப் பின்னர் கையும் களவுமாக பிடித்தனர். அதுவும் நடிகருக்கு போதை பொருள் கொடுப்பவர்களை முதலில் கைது செய்து விசாரிக்கும் விதத்தில் விசாரித்ததில் நடிகரின் பெயர் வெளியே வரவே, நடிகரை கோழி அமுக்குவது போல அமுக்கியது போதை தடுப்பு பிரிவு.

Tamil Cinema Gossip Actor Who Took Good Decision after Drug Case

போதையின் பாதை: இதனால் நடிகர் பல மாதங்கள் சிறையில் இருக்க, ஒருவழியாக ஜாமீனில் வெளியே வந்துள்ளார். வெளியே வந்தவர் மீண்டும் ஏதாவது பழைய படி சேட்டைகளில் ஈடுபடுகிறாரோ என்ற எண்ணம் பலருக்கும் இருந்தது. ஆனால் அவருக்கு நெருக்கமானவர்களே ஆச்சரியப்படும் அளவுக்கு நடிகர் மொத்தமாக மாறி விட்டாராம். இனிமேல் போதையின் பாதை என்பதே இருக்க கூடாது என்றும், குடும்பம் தான் இனிமேல் எதிர்காலம், குடும்பத்துடன் நல்ல முறையில் நேரம் செலவிடவும், குடும்பத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தவும் எல்லா முயற்சிகளும் எடுத்து வருகிறாராம்.

மன மாற்றம்: அந்த சம்பவத்திற்குப் பின்னர் மனைவியிடம் மிகவும் வருத்தப்பட்டு மன்னிப்பு எல்லாம் கேட்டுள்ளாராம் நடிகர். மனைவியும் நடிகரை மன்னித்து, திருந்தி வாழ அறிவுரை சொன்னாராம். இது மட்டும் இல்லாமல் நடிகரின் செல்ல மகளுக்காகவே இனிமேல் போதையை கையில் எடுக்க மாட்டேன் என்று உறுதி எடுத்துள்ளாராம். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பலரும் நடிகரை தங்களது படங்களில் நடிக்க வைக்க யோசித்து வருகிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X