செகண்ட் சேனல் பேச்சைக் கேட்டு தலையில் மண்ணள்ளி போட்டுக் கொள்ளும் நடிகர்? பொழப்பு சிரிப்பா சிரிக்குது

By Staff

சென்னை: நல்லா இருந்த நடிகர் இப்படி முடிவுகளை எடுப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அவ்வப்போது ஒரு பெரிய ஹிட், மற்றபடி சுமாரான படங்களை தேர்வு செய்து நடிப்பது என தனக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை அதுவும் குறிப்பாக ஃபேமிலி ஆடியன்ஸை வைத்திருந்தார் அந்த நடிகர். ஆனால் மனைவி இருக்கும்போதே பிரபலம் ஒருவருடன் ஏற்பட்ட நெருக்கம், இப்போது அவரது குடும்ப வாழ்க்கை தொடங்கி திரையுலக வாழ்க்கை வரை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அடிபட்டு வருகிறது.

இதில் ஏற்கனவே மனைவி மற்றும் தனது குழந்தைகளைப் பிரிந்து விட்டார். காரணம் கேட்டால் மாமியார் கொடுமை, பொண்டாட்டி டார்ச்சர், எல்லாரும் என் காதில் பூ சுற்றுகிறார்கள் என்றெல்லாம் கதை விட்டுக் கொண்டு இருந்தார். நடிகர் ஆடிய ஆட்டத்தை எல்லாம் முன்பே கணித்த அவரது மனைவி, தன்னால் முடிந்தவரை போராடிப் பார்த்துவிட்டு, இனி எல்லாம் உன் விருப்பப்படி என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார்.

Tamil Cinema Gossip Actor Who Took Wrong Decision For His New Girl Friend

திருமணத்தை மீறிய தோழி: நடிகரும் இதுக்குத் தானே இத்தனை போராட்டம் என்று மனைவியை கழட்டி விட்டுவிட்டு தான் நெருங்கிப் பழகிக் கொண்டிருந்த தோழியுடன் இன்பச்சுற்றுலா சென்றுவிட்டார். தனது படத்தின் புரோமோசனுக்கு கூட சரியாக கலந்து கொள்ளாமல், கிட்டத்தட்ட இரண்டு மாதத்திற்கு கோலிவுட் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. அதன் பின்னர் வந்தாலும் அவ்வப்போது எஸ்கேப் ஆகிவிடுகிறாராம்.

தவறான முடிவுகள்: இபப்டி இருக்கையில், இவரது விவாகரத்து அறிவிப்புக்குப் பின்னர் வெளியான எந்த படமும் இவருக்கு கை கொடுக்கவில்லை. இப்படி இருக்கையில் நடிகர் கமிட்டான படத்தின் படப்பிடிப்புக்கு தனது தோழியுடனே சென்றுள்ளார். படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, தோழி மிகவும் வருத்தப்பட்டுள்ளார். இதனால் தோழியை சமாதானம் செய்ய, இனிமேல் நீ சொல்லும்வரை அந்த படத்தின் படப்பிடிப்புக்கு செல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்துள்ளாராம் நடிகர். இதனால் அந்த படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநரும் போன் செய்தால் நடிகர் எடுப்பதே இல்லையாம். ஒரு கட்டத்தில் நடிகர் மேனேஜர் இது தொடர்பாக நடிகருக்கு எடுத்துச் சொல்ல, மேனஜரைத் தூக்கி வெளியே வீசி விட்டாராம் நடிகர். தோழி சொல்லே மந்திரம் என்று இருக்கும் நடிகர் இப்படியே இருந்தால் கஷ்டம் தான் என்று பேசி வருகிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X