ஒரே ஒரு படம்.. தயாரிப்பாளர், இயக்குநரை மொத்தமாக முடித்துவிட்ட பந்தய நடிகர்!
சென்னை: இந்த நடிகர் தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவரது படங்கள் வெளியானாலே தியேட்டர்கள் திருவிழா போல மாறும் அளவுக்கு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். ஆனால் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படத்தில் இருந்தால் போதும், படத்தை வணிக ரீதியாக வெற்றிப் படமாக மாற்றிக் கொடுக்கும் அளவுக்கு ரசிகர்கள் அவருக்கு உள்ளார்கள். ஆனால் இந்த நடிகர் எடுத்த ஒற்றை முடிவால் ஒரு தயாரிப்பாளர் மற்றும் ஒரு இயக்குநரின் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறியுள்ளது.
இந்த நடிகர் தமிழ் சினிமாவில் கடந்த சில தாசப்தங்களாக முன்னணி நடிகர்கள் பட்டியலில் உள்ளார். சினிமா பின்புலம் இல்லாமல் திரைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்த இவர். தன்னைத்தானே செதுக்கி முன்னணி நடிகராக உயர்ந்தார். இந்நிலையில் நடிகர் ஒரு கட்டம் வரை காதல் கதைகளில் நடித்து வந்தார். அதன் பின்னர் ஆக்ஷன் படங்களில் நடிக்கத் தொடங்கியவருக்கு வெற்றி மேல் வெற்றி குவிந்து கொண்டே வந்தது. இந்நிலையில் நடிகர் தனது சொந்த வாழ்க்கையில் பல அனுபவங்களை கற்றுக் கொண்டதை சினிமாவில் இம்பிளிமெண்ட் செய்தது ஒரு தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக மாற்றியுள்ளது.

நெருக்கடியில் தயாரிப்பாளர்: அந்த தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே அடுத்தடுத்து தோல்விப் படங்களால் நெருக்கடியில் இருந்த போது, அவரது கால்ஷீட்டை அவர்களுக்கு கொடுத்தார். ஒரு நல்ல படம் கொடுத்து திரைத்துறையில் தங்களை நீடித்து நிலைக்க செய்வார் என தயாரிப்பாளர் தரப்பில் நம்பிக் கொண்டு இருந்தார்கள். அதேபோல் இயக்குநரும் நல்ல படங்களைக் கொடுத்து கவனம் பெற்றவர் என்றாலும், ஒரு படத்தை தவிர பெரிய ஹிட் அடிக்கும் படம் என எதுவும் இல்லாமல் இருந்தது.
புது முடிவு: இதனால் இந்த நடிகரை வைத்து மாஸான ஆக்ஷன் படத்தை எடுத்துவிட்டால், பெரிய இயக்குநர் என்ற அந்தஸ்தை அடைந்துவிடலாம், அதற்காக கடின உழைப்பையும் செலுத்தலாம் என்ற நம்பிக்கையிலும் இருந்தார். ஆனால் நடிகரோ ஆக்ஷன் காட்சிகள் வேண்டாம், பஞ்ச் டயலாக்குகள் வேண்டாம், அது வேண்டாம், இது வேண்டாம் என பல வேண்டாம் லிஸ்ட்கள் போட்டுக் கொடுத்துள்ளார். இதனால் அப்செட் ஆன தயாரிப்பாளர் தரப்பும் இயக்குநரும் செம அப்செட் ஆகி உள்ளார்கள்.
முடித்துவிட்ட நடிகர்: ஏற்கனவே நெருக்கடியில் இருந்த தயாரிப்பாளர் நிறுவனம் வேறு வழி இல்லாமல் படத்தை தயாரித்தார். படம் தோல்விதான் எனத் தெரிந்துமே படத்தை தயாரிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தயாரிப்பாளர் ஆளானார். இது மட்டும் இல்லாமல் நடிகர் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவதற்கு முன்னரே மொத்த சம்பளத்தையும் கொடுக்க வேண்டும் என்ற கண்டிஷன் போட்டு, மேலும் நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளார். படம் வெளியாகி படுதோல்வி படமாக மாறியது. இந்த நடிகர், புதிதாக முயற்சி எடுக்கிறேன் என ஒரு இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரின் எதிர்காலத்தை நெருக்கடிக்கு தள்ளிவிட்டாரே என பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications