எல்லாம் தெரிந்துதான் காய் நகர்த்துகிறாரா நடிகை? நடிகருக்கு இது ஒன்றும் புதிது இல்லையே..
சென்னை: இந்த நடிகர் இளம் வயதிலேயே நடிக்க வந்துவிட்டார். நடிப்பில் கெட்டிக்காரராக பார்க்கப்பட்ட அவருக்கு பெரிய இடத்தில் இருந்து வாழ்க்கைத் துணை அமைய, நடிகர் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். ஜம்முனு பெரிய இடத்து மாப்பிள்ளையாக மாறியதால், அவருக்கு என்று ஒரு தனி மரியாதை ஏற்கனவே இருந்ததைக் காட்டிலும் கூடுதலாக இருந்தது.
என்னதான் சிறந்த நடிகர் என்றாலும் இவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளும் கிசுகிசுக்களும் நிரம்பி வழிகிறது. இன்றைக்கு டாப்பில் உள்ள நடிகைகள் தொடங்கி, அவர் திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய போது டாப்பில் இருந்த நடிகைகள் வரை என பலரையும் கைக்குள் போட்டுக் கொண்டு அவர் ஆடாத ஆட்டம் இல்லை என்று சொல்லலாம். அதுவும் அவர் மற்ற நடிகைகளுடன் எக்ஸ்ட்ரா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது எல்லாம் ஒரு புறம் இருக்க தன்னுடன் நடிக்கும் நடிகைகளுக்கு தொடர்ந்து ஏதாவது குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருக்கிறார் என்ற புகார்களும் உள்ளது.

சர்ச்சை நடிகர்: இப்படி அவ்வப்போது ஏதாவது ஒரு சர்ச்சையில் நடிகர் பெயர் தொடர்ந்து அடிபட்டுக் கொண்டே இருந்தது, இருக்கிறது. அதுவும் நடிகர் ஏதாவது ஒரு நடிகையுடன் இணைந்து பணியாற்றினால், அந்த நடிகைக்கு விவாகரத்து ஆகிவிடுகிறது என்ற பேச்சு இவர் மீதான கிசுகிசுக்களை அதிகமாக்கியது. இப்படி இருக்கையில் தோளுக்கு மேல் இவரது வாரிசுகள் வளர்ந்த பின்னர், விவாகரத்து வேண்டும் என்று நீதிமன்ற கதவைத் தட்டினார்.
நடிகைக்கு எங்கே போச்சு அறிவு?: இப்படி இருக்கையில் ஒரு வழியாக அவருக்கு விவாகரத்து கிடைத்துவிட்டது. இப்போது நடிகர் ஒரு பான் இந்தியா அளவில் புகழ் பெற்ற வளர்ந்து வரும் நடிகையுடன் ஓவர் நெருக்கமாக இருக்கிறார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக எல்லாம் பேச்சுக்கள் அடிபடுகிறது. இந்த தகவலைக் கேள்விப்பட்டதும் திரைத்துறையில் பலரும் நடிகர் தான் இப்படி ஏதாவது செய்து கொண்டே இருக்கிறார் என்றால் நடிகை கொஞ்சமாவது உஷாராக இருக்க வேண்டாமா? அழகா இருக்கும் பெண்கள் அறிவாக இருக்க மாட்டார்கள் என்பது இந்த நடிகை விஷயத்தில் சரியாகத்தான் இருக்கிறது என்று பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











