நடிகரின் போதை ஆட்டம்.. புத்தாண்டில் மஜா பண்ண உடன் சென்ற நடிகை.. குடும்பம் சீரழிஞ்சிடுச்சே
சென்னை: இந்த நடிகர் ரொம்பவே விமர்சனங்களைச் சந்தித்தவர் தான். குறிப்பாக அவரது குடும்ப விவகாரத்தில் நடிகர் சந்திக்காத விமர்சனமே கிடையாது. குறிப்பாக தன்னுடன் நடித்த நடிகையுடன் இவருக்கு ஏற்பட்ட நெருக்கம், நடிகரின் மனைவி அவரை விட்டுப் பிரியும் அளவுக்கு மாறிவிட்டது. இதிலும் நடிகரின் மகன் தோளுக்கு மேல் வளர்ந்த பின்னரும், நடிகரின் ஓவர் ஆட்டத்தால் தான் குடும்பமே பிரிந்தது.
நடிகர் தொடக்கத்தில் எல்லாம் ஒழுக்கமாகத்தான் இருந்துள்ளார். நடிகருக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த புகழ், அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் வேண்டும் என்ற எண்ணத்தில் நடிகருக்கு சொம்படிக்கச் சென்ற இரண்டு நபர்களால் தான் நடிகர் இப்போது கட்டிய மனைவியையும் பெற்ற மகனையும் பிரிந்து வாழ வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளார்.

உதவியாளர் செய்யும் வேலை: குறிப்பாக நடிகருக்கு போதைப்பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் வேலையை அந்த இரண்டு நபர்களில் ஒருவர் தான் செய்து வருகிறாராம். அதுவும் நடிகருக்கு நடிகையுடன் இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி, அவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்ள எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கிறாராம். இந்த நபர் இப்படிச் செய்தால், மற்றொருவர் நடிகரின் பெற்றோர்கள் நடிகரை எளிதில் அணுக முடியாத அளவுக்கு பல தில்லாலங்கடி வேலைகளைச் செய்து வருகிறாராம்.
ஓவர் போதை: இப்படி இருக்கும்போது நடிகர் எங்காவது செல்ல வேண்டும் என்றால், தனக்கென ஸ்பெஷல் வாகனத்தை தான் பயன்படுத்துகிறாராம். அதற்கு முக்கியமான இரண்டு காரணங்கள் இருக்கிறதாம். அதாவது தனக்கு நெருக்கமான நடிகையுடன் நெருக்கமாக இருக்கவும், போதைப் பொருளை பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறாராம். இப்படி இருக்கும்போது, சமீபத்தில் வேலை விஷயமாக வெளியில் சென்று வீட்டுக்குத் திரும்பும்போது, ஓவர் போதையில் தள்ளாடிக் கொண்டு வீட்டுக்கு வந்தாராம்.
புத்தாண்டு கொண்டாட்டம்: கடற்கரை ஓரமாக உள்ள அவரது வீட்டில் நடிகரும் நடிகையும் ஓவர் போதையில் இருந்துள்ளனர். அதுவும் இந்த புத்தாண்டுக்கு இருவரும் ஒரு நாளுக்கு மேலாக கதவை அடைத்துக் கொண்டு, வீட்டிற்குள் யாரையும் விடவில்லையாம். இப்படி கூத்து அடித்துக் கொண்டு இருக்கும் இந்த நடிகர், தனது எதிர்கால திட்டங்களில் பல பயங்கரமான வேலைகளை திட்டமிட்டுள்ளாராம். இப்படி இருக்கையில் நடிகரின் பெயரைக் கெடுக்கவே அவருக்கு வேண்டாதவர்கள் இது போன்ற விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











