நடிகை கேரவனுக்கு அடிக்கடி விசிட் அடித்த இளம் நடிகர்.. கடுப்பான இயக்குநர்.. ஷுட்டிங் ஸ்பாட்டிலேயே பளார்

By Staff

சென்னை: என்னதான் பல கோடிகளைக் கொட்டி படம் எடுத்தாலும் படப்பிடிப்புத் தளத்தில் ராஜா மாதிரி இருப்பது கதாநாயனும் கதாநாயகியும் தான். இயக்குநருக்கு திரைத்துறையில் மதிப்பு இருந்தால் மட்டுமே இயக்குநருக்கு மதிப்பு இருக்கும் இல்லை என்றால் அதுவும் இருக்காது. ஆனால் சமீபத்தில் ஒரு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவம், ஒட்டுமொத்த கோலிவுட்டிலும் காதும் காதும் வைத்தபடி பேசப்பட்டு வருகிறது.

அந்தப் படத்தில் நடிக்கும் பெரிய இடத்துப் பெண் இளம் நடிகைக்கும் , அவரோடு ஜோடி சேர்ந்து நடிக்கும் இளம் நடிகருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்திருப்பதாக ஏற்கெனவே கிசுகிசுக்கள் கிளம்பி இருந்தது. அந்த நடிகை தனது கேரவனைப் பூட்டி வைத்துவிட்டு, மணிக்கணக்கில் இளம் நடிகருடன் ஜாலியாகப் பேசிக் கொண்டிருப்பது வழக்கமாக இருந்திருக்கிறது. இதைப் பார்த்த மற்ற நடிகர்-நடிகைகள் கிசுகிசுத்தாலும், அது அவ்வளவு தூரம் போகும் என்று யாரும் நினைக்கவில்லை.

Tamil Cinema Gossip Actor Who Very Close With Actress Director Slams Both and Attack Actor

கேரவன் லூட்டி: சம்பவம் நடைபெற்ற நாளில் படப்பிடிப்பு தளத்தில் முக்கியமான காட்சியைப் படமாக்க இயக்குநர் திட்டமிட்டிருந்தார் என்று கூறப்படுகிறது. நடிகை சரியான நேரத்திற்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வராமல், தனது கேரவனுக்குள் இளம் நடிகருடன் புகுந்துகொண்டு கதவைச் சாத்திக் கொண்டுள்ளார். ஒரு மணி நேரம் ஆகியும் அவர்கள் வெளியே வரவில்லை. இயக்குநருக்கு பொறுமை எல்லை மீறி முதலில் தனது உதவி இயக்குநர்களையும், புரெடக்‌ஷன் தரப்பிலும் காட்டுக் கத்து கத்தியுள்ளார்.

பளார்: ஒரு கட்டத்தில் கோபத்துடன் கேரவன் கதவைத் தட்டிய இயக்குநர், "எவ்வளவு நேரம் காக்க வைப்பீங்க?" என்று கத்தியிருக்கிறார். உள்ளே இருந்து கிண்டலான பதில் வர, கடுப்பான இயக்குநர் நேராக கேரவனுக்குள் புகுந்தார். அங்கே நடந்த விவாதத்தில் இயக்குநர் ஆவேசமடைந்து, "வேலை செய்ய வந்த இடமா அல்லது இது வேறு ஏதாவது இடமா?" என்று கத்த, அங்கிருந்தவர்கள் முன்னிலையிலேயே இளம் நடிகரை ஒரு பளார் விட்டுவிட்டாராம் இயக்குநர்.இந்தச் சம்பவம் அங்கிருந்த ஒட்டுமொத்த யூனிட்டையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. "நாங்கள் தொழில் செய்ய வந்திருக்கிறோம். உங்கள் லூட்டிக்கு இது இடமல்ல" என்று இயக்குநர் வெளிப்படையாகவே திட்டித் தீர்த்ததுதான் இப்போது ஹாட் டாபிக்.

பயம்: இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அந்த நடிகை கேரவனைப் பயன்படுத்தவே பயந்துபோய் இருக்கிறாராம். சினிமாத் துறையில் ஒழுக்கம் மற்றும் தொழில் நேர்மை முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில் இந்த 'தர்ம அடி' சம்பவம் தற்போது கோலிவுட்டில் பரவி வருகிறது. படப்பிடிப்பு தளங்களை சிலர் கேளிக்கை விடுதியாக மாற்றிக் கொண்டிருப்பது ஆரோக்கியமானதுதானா என்ற விவாதமும் கிளம்பியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X