கண்ணீர் சிந்திய நடிகர்.. கன்வின்ஸ் ஆன நடிகை.. பழைய இணக்கம் இல்லையினு நடிகருக்கு வெசனம்!
சென்னை: இந்த நடிகரும் நடிகையும் நெருக்கமாக பழகுவது ஊர் அறிந்த விஷயம் என்றாலும், அவர்களும் தாங்கள் நெருக்கம் என்று காட்டிக் கொள்வது இல்லை, மற்றவர்களும் இவர்கள் நெருக்கமாக இருப்பது தெரிந்தாலும் தெரியாதது போல நடந்து கொள்கிறார்கள். இது இப்படி இருக்கையில் கடந்த சில ஆண்டுகளாகவே இவர்கள் இருவருக்குள்ளுமான நெருக்கம் என்பது முன்பை விட அதிகரித்துள்ளதாம்.
அதாவது நடிகர் தனது மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்கிறாராம். இது மட்டும் இல்லாமல், நடிகரை அவரது மகன் வெறுத்தே விட்டதாக கூறப்படுகிறது. நடிகையும் நடிகரும் நெருக்கமாக பழகுவது தெரிந்தும் வீட்டில் அது குறித்து கூறாமல், நடிகருக்கும் நடிகைக்கும் தேவையான சகல ஏற்பாடுகளையும் செய்து கொடுத்த நடிகரின் மேனேஜரை, நடிகரின் மகனே ஓங்கி அறைந்துள்ளார் என்று எல்லாம் தகவல்கள் வெளியானது.

நடிகைக்காக குடும்பத்தை தூக்கி எறிந்த நடிகர்: இப்படி இருக்கும்போது நடிகருக்கும் நடிகைக்கும் இருக்கும் மிகவும் நெருக்கமான உறவு குறித்து பேச்சுக்கள் ரொம்பவும் மோசமாக எழ ஆரம்பித்தது. முதலில் இருவரும் கண்டு கொள்ளவில்லை என்றாலும், ஒரு கட்டத்தில் ஒரு முக்கிய புள்ளி மிகவும் கொச்சையாக பேசி விட்டார் என்று கூறப்படுகிறது. இதனால் நடிகை மிகவும் மன வேதனை அடைந்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நடிகை பலமுறை நடிகரை வற்புறுத்தி உள்ளார். ஆனால் நடிகரின் மனைவி விவாகரத்து ஒப்பந்தத்தில் கையெழுத்து போட தயாராக இல்லை என்று கூறப்படுகிறது.
கவலையில் நடிகர்: இப்படி இருக்கையில் நடிகருக்கும் நடிகைக்கும் இடையில் சில மனக்கசப்பு ஏற்பட, நடிகை மிகவும் முக்கியமான முடிவாக இனிமேல் நடிகர் சகவாசமே வேண்டாம் என்று முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் நடிகரோ நடிகையை சமாதானப் படுத்த பல முயற்சிகள் எடுத்தாராம். ஒரு கட்டத்தில் நடிகையிடம் கண்ணீர் சிந்தி சமாதானம் செய்தாராம். தனக்காக மனைவி, மகன் என மொத்த குடும்பத்தையும் வேண்டாம் என்று சொன்ன நடிகர் இப்படி தனக்காக அழுவதைப் பார்த்து மனம் இறங்கி மன்னித்தாராம் நடிகை. ஆனாலும் அந்த மனக்கசப்புக்கு முன்னர் இருந்த இணக்கம் இப்போது இல்லை என்று நடிகர் வேதனையில் இருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











