காதலியின் டச் டச் அப்ரோச்சில் மயங்கிப் போன வாரிசு நடிகர். கடலோரமா காத்து வாங்க பல கோடியில் பங்களா!
சென்னை: இந்த நடிகரைப் பார்த்து பலரும் தொடக்கத்தில் கேட்ட கேள்வி இந்த பூனையும் பால் குடிக்குமா என்பதுதான். ஆனால் இப்போது இந்த நடிகரோ பால் குடிச்சு குடிச்சு போர் அடிக்குது பீர் இருந்தா கொடுங்க எனக் கேட்கும் அளவிற்கு ஓவரா கெட்டுப்போய் உள்ளாராம். அதற்கு நடிகருக்கு புதிதாக கிடைத்த காதலி தான் காரணமாம். இதில் என்ன விஷயம் என்றால் இந்த நடிகருக்கு ஏற்கனவே திருமணமாகி பெயர் சொல்ல இரண்டு குழந்தைகளும் உள்ளார்கள்.
இந்த நடிகர் சினிமாவில் அறிமுகமான சில ஆண்டுகளிலேயே திருமணம் செய்து கொண்டவர். அதுவும் காதல் திருமணம். ஆனால் இப்போது நடிகர் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கி இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. காதல் வாழ்க்கையும் 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளது. காதலி மனைவியாக மாறி, இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொடுத்தும் விட்டார். ஆனால் நடிகருக்கு நாளுக்கு நாள் தனது மனைவி மீது கோபங்களும் விருப்பமின்மையும் அதிகரித்துள்ளது. இதனால் நடிகர் இதையெல்லாம் சொல்லி புலம்ப நண்பர் ஒருவரை தேர்வு செய்து புலம்பியுள்ளார்.

புதுக்காதலி: நண்பரோ நடிகரின் நிலைமையைப் பார்த்து விட்டு, தனக்குத் தெரிந்த தோழியிடம் இது தொடர்பாக பேசியுள்ளார் அந்த நண்பர். விஷயத்தை கேள்விப்பட்ட தோழி, நடிகரை அறிமுகம் செய்து வைக்க சொல்லியுள்ளார். அந்த பெண் இதுபோல பலருக்கும் உதவியவர் என்பதால் நடிகரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். இங்கிருந்துதான் பிரச்னை அதிகமாகியுள்ளது. அதாவது நடிகரும் அந்த பெண்ணும் தொடக்கத்தில் வழக்கமாக பிரச்னை உள்ளவர் மற்றும் அதனைக் கலை பவர் என்றுதான் பழகியுள்ளார்கள். ஆனால் போகப் போக இருவருக்குள்ளும் தனிப்பட்ட முறையில் ஒருவர் மீது ஒருவருக்கு நல்ல அபிப்ராயம் ஏற்பட, அது நாளாக நாளாக நெருக்கத்தை அதிகரித்துள்ளது. இருவருக்கும் இடையில் டச் டச் அப்ரோச் ரொம்பவும் அதிகரித்துள்ளது.
பீச் ஹவுஸ்: ஒரு கட்டத்தில் நடிகர், அந்த பெண்ணின் மீது காதல் கொள்ள, அதன் பின்னர் தனது புதுக்காதலியே கதி என்று இருந்துள்ளார். நடிகரின் நடவடிக்கைகள் மாற்றம் அடைந்ததால் சந்தேகம் அடைந்த மனைவி, நடிகரை ஒரு நாள் கையும் களவுமாக பிடித்துள்ளார். ஆனால் வெளியே சொன்னால் புருஷனின் மானம் மரியாதை எல்லாம் போய்விடும், எனவே புருஷனைத் திருத்திற வழியைப் பார்க்கலாம் என்று யோசித்துள்ளார். ஆனால் நடிகரோ தனது புது பட கமிட்மெண்ட் சம்பவங்களைக் கொண்டு கடலோரமாக புதுக்காதலிக்கு பீச் ஹவுஸ் பல கோடிகளில் வாங்கிக் கொடுத்துள்ளாராம். இப்போது நடிகர் தனது காதல் மனைவியை விட்டுவிட்டு, புது காதலியோடு பீச் ஹவுஸில் செம ஆட்டம் போட்டு வருகிறாராம். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டவர்கள் இந்த காதலி எத்தனை நாளைக்கு என கேட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











