நடிகையை மடக்க முயற்சி செய்து மனைவியிடம் மாட்டிக் கொண்ட நடிகர்.. குடும்பமே சீரிழியுது!

By Staff

சென்னை: இந்த நடிகர் வாரிசு நடிகராக வந்து இப்போது கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர். இவர் தனது தொடக்க காலத்தில் லவ்லி கதாநாயகனாக இருந்து வந்தார். இதனால் ஆண்கள் மற்றும் பெண்கள் என பலரது விருப்ப நடிகராகவும் மாறினார். சினிமாவிற்குள் இவர் காலடி எடுத்து வைத்த சில ஆண்டுகளுக்கு உள்ளாகவே ஒரு நடிகையுடன் ஓவர் நெருக்கமாக பழகினார். இன்னும் சொல்லப்போனால் அந்த நடிகையே கதி எனக் கிடந்தார்.

படத்தின் ஷூட்டிங் எப்போது முடியும் எப்போது நடிகையைக் கூட்டிக் கொண்டு ஜாலியாக ஊர் சுற்றுவது என இருந்தார். அதன் பின்னர் சில ஆண்டுகளில் நடிகை இவருக்கு அலுப்பு தட்டி விட, நடிகையை நைசாக கழட்டி விட்டுவிட்டு, ஒன்றும் தெரியாதவராக இருந்து கொண்டார். ஆனால் நடிகர் ஆட்டம் அதற்குள் அனைவருக்கும் தெரிந்துவிட்டது.

அதன் பின்னர் வீட்டில் சொன்ன பெண்ணைக் கட்டிக் கொண்டு திருமண வாழ்க்கையை தொடங்கிய நடிகர், அதன் பின்னாவது அமைதியாக இருப்பார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் நடிகரோ திருமணத்திற்கு பின்னரும் கூட அடங்காமல், தன்னுடன் நடித்த இன்னோரு நடிகையுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்து விட்டார். இவர்களின் நெருக்கம் படத்தில் இணைந்து நடிக்கும் போது மட்டும் தான் இருக்கும் என பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் இவர்களின் நெருக்கம் நாளுக்கு நாள் அதிகமாக, ஒரு கட்டத்தில் நடிகரின் மனைவிக்கு இது தெரியவர பெரிய பிரச்னையாக மாறியுள்ளது. முதலில் இனிமேல் அடங்கி இருப்பதாக கூறிய நடிகர் அடுத்த சில மாதங்களில் மீண்டும் அதே நடிகையுடன் ஆட்டத்தை தொடங்கியுள்ளார்.

Tamil Cinema Gossip Actor Wife Walk Away fROM Actor Who Very Close With Actress

ஓவர் நெருக்கம்: நடிகையும் நடிகரை விடுவதாக இல்லை என்பதுபோல நடிகரே கதி என தனது வாழ்க்கையை மாற்றிக் கொண்டுள்ளார். நடிகைக்கு திருமண வயதை எல்லாம் கடந்து விட்டாலும் திருமணம் செய்து கொள்ளாமல் நடிகரை தன் கட்டுக்குள் வைத்துக் கொண்டு ஆட்டுவித்து வருகிறார். இந்த போராட்டத்தில் நடிகரின் மனைவி கிட்டத்தட்ட தோல்வி அடைந்து விட்டார் என்றுதான் கூறவேண்டும். அதாவது, நடிகரின் மனைவி இனிமேல் இந்தாளுடன் வாழ முடியாது என நடிகரை விட்டுவிட்டு தனது பெற்றோரிடம் சென்று விட்டார்.

சீரழியும் குடும்பம்: நடிகரும் கோபத்தில் சென்ற மனைவியைச் சமாதனப்படுத்தி வீட்டுக்கு கூட்டி வந்து நல்லபடியாக குடும்பத்தை நடத்தாமல், தொல்லை ஒழிந்தது என மனைவியை கண்டு கொள்ளாமல் இருக்கிறாராம். இதனால் தற்போது நடிகரும் அவரது மனதிற்கு நெருக்கமான நடிகையுடன் செம ஜாலியாக இருக்கிறாராம். நடிகரின் ஓவர் சேட்டை ஒரு பெண்ணின் எதிர் காலத்தை கேள்விக்குறியாக மாற்றி விட்டதே என விவரம் தெரிந்தவர்கள் பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X