நிம்மதியாவே வாழ விடமாட்டேன்.. நடிகருக்கு தொல்லை கொடுக்க முடிவெடுத்த முன்னாள் மனைவி!
சென்னை: இந்த நடிகர் கடந்த சில தசாப்தங்களாக தமிழ் சினிமாவில் இருக்கிறார். இவருக்கு என கணிசமான ரசிகர்கள் பட்டாளமும் இருக்கிறார்கள். இவர் சினிமாவில் அறிமுகமான சில ஆண்டுகளிலேயே காதல் திருமணம் செய்து கொண்டவர். இவரும் வாரிசு நடிகர், இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டதும் ஒரு சினிமா பிரபலத்தின் மகளைத்தான். இவர்களின் திருமணத்தின் போது இரண்டுமே பெரிய இடம், அதனாலதான் எல்லாம் நல்லபடியா முடுஞ்சுது என்று பேசி வந்தார்கள். ஆனால் இப்போது நடிகர் தனது மனைவியை கழட்டி விட்டுவிட்டு வேறு ஒரு பெண் பிரபலத்துடன் ஜாலியாக சுற்றி வருகிறார். இதனால் அவரது முன்னாள் மனைவி நடிகரின் நிம்மதியைக் கெடுக்க முடிவெடுத்துள்ளாராம்.
இந்த நடிகர் மனைவியோடு இருக்கும் போது அந்த பெண் பிரபலத்துடன் பழகி வந்துள்ளார். தொடக்கத்தில் நடிகரின் மனைவிக்கு எந்தவிதமான சந்தேகமும் எழவில்லை. ஆனால் அதன் பின்னர் நடிகர் மீது அவரது மனைவிக்கு சந்தேகம் வர, ஒரு கட்டத்தில் நடிகர் சிக்கிக் கொண்டார். நடிகரின் மொபைலில் அந்த பெண் பிரபலத்துடன் நடிகர் குடியும் குடித்தனமுமாக இருந்தது தொடர்பான புகைப்படங்களும் வாட்ஸ்அப் மெசேஜ்களும் இருந்துள்ளது.

வலைத்துப் போட்ட பெண் பிரபலம்: இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகரின் மனைவி, இதை இத்துடன் விட்டு விடு, நமக்கு குழந்தைகள் உள்ளார்கள். எனவே இது போல மீண்டும் செய்ய வேண்டாம் எனக் கூறியுள்ளார். நடிகர் முதலில் சரி எனக் கூறிவிட்டு அமைதியாக இருந்துள்ளார். நடிகர் அமைதியாக இருந்தாலும், நடிகர் இல்லாமல் அந்த பெண் பிரபலத்தால் இருக்க முடியவில்லை போல. நடிகருக்கு அடிக்கடி மெசேஜ், போன் என மோச வலையை வீசிக் கொண்டே இருந்துள்ளார்.
மனசாட்சியே இல்லாத நடிகர்: இதனால் பிரபலத்தின் பக்கம் மொத்தமாக சாய்ந்த அந்த நடிகர், ஒரு கட்டத்தில் மனைவியை குழந்தைகளோடு விட்டுவிட்டு பிரபலத்துடன் செம ஜாலியாக இருந்து வருகிறார். குறிப்பாக அவரது நடவடிக்கைகளைப் பார்த்த இணையவாசிகள் எப்படி இருந்த நடிகர் இப்படி ஆகிட்டாரே என பேசி வருகிறாகள். நடிகரும் மனைவியை விட்டு பிரிந்து வந்த பின்னர் அமைதியாக இருப்பதை விட்டுவிட்டு, தனது மனதிற்கு நெருக்கமான பெண் பிரபலத்துடன் ஊர் சுற்றுவது தொடர்பான புகைப்படங்களை அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். இதனால் நடிகரின் முன்னாள் மனைவியோ செம கடுப்பாகி இப்போது கோபத்தில் ஒரு முடிவு எடுத்துள்ளாராம்.
முன்னாள் மனைவி எடுத்த முடிவு: அதாவது, நடிகர் எப்போது எல்லாம் தனது புதுக் காதலியுடனான புகைப்படங்களை இணையத்தில் பகிர்கிறாரோ, அப்போது எல்லாம் தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, சோகமான அல்லது சிம்பதியை உருவாக்கும் கேப்ஷன்களை இட்டு, நடிகர் குறித்து பலரும் கேவலமாக பேச வேண்டும் எனவும் முடிவு எடுத்துள்ளராம். தேவைப்பட்டால் நடிகரை நேரடியாக அட்டாக் செய்தும் போஸ்ட் போடவும் தயார் என்ற மனநிலையில் தான் அவர் உள்ளாராம். இதைக் கேள்விப்பட்டவர்கள், அந்த நடிகருக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என திட்டி வருகிறார்கள். இந்த தகவலைத் தெரிந்து கொண்ட நடிகரும் பதிலடிக்கு தயாராகி வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











