நடிகரை நம்பி வாழ்க்கையைத் தொலைத்த அப்பாவி நடிகை.. இப்போது எடுத்திருக்கும் பகீர் முடிவு!
சென்னை: இந்த நடிகை தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறக்க வேண்டிய நடிகை. காரணம் அந்த அளவுக்கு அழகும் திறமையும் கொண்டிருந்தார். எப்படியும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என பலரும் நினைத்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் நடிகையின் வாழ்க்கை ஒரு நடிகரால் மொத்தமாக மாறிவிட்டது.
இந்த நடிகை தமிழ் சினிமாவில் துணை நடிகையாக தான் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால் அதன் பின்னர் சில படங்களில் அவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. இதனால் கமிட் ஆகி நடித்து வந்தார். நடிகை கமிட் ஆகி நடித்த படங்கள் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும், தோல்வி அடையவில்லை. நடிகை பெரிய பிரேக்கிற்காக காத்துக் கொண்டிருந்தார்.
அப்படியான நேரத்தில்தான் நடிகையை ஒரு பார்ட்டியில் சந்தித்த நடிகர், அப்போதே விழுந்துவிட்டார். அந்த பார்ட்டியில் நடிகையை அனுபவித்து விட வேண்டும் என யோசித்து, நடிகையிடம் பேச்சு கொடுத்துள்ளார். ஆனால் நடிகை அப்போது குடிக்கும் பழக்கம் இல்லாதவராக இருந்ததது மட்டும் இல்லாமல், நடிகரின் அப்ரோச் குறித்து தெரியாதவராக இருந்துள்ளார். அதனால் நடிகரின் முயற்சிகள் நடிகையிடம் எடுபடவில்லை.
நடிகர்: இதனால் நடிகர் தனது அடுத்த படத்தில் நடிகையை கமிட் செய்யச் சொல்லி உள்ளார். படப்பிடிப்பின்போது நடிகையிடம் அதிகம் ஏதாவது பேசிக் கொண்டே இருந்துள்ளார். இதனால் நடிகை, நடிகரின் வலையில் கொஞ்சம் கொஞ்சமாக விழுந்துள்ளார். நடிகைக்கு தான் புதிதாக, வாங்கிய பீச் ஹவுஸைக் காட்டுகிறேன், பக்கத்தில் இன்னொரு பீச் ஹவுஸ் இருக்கிறது, நீங்க கூட வாங்கலாமே எனக் கூறி அழைத்துச் சென்றுள்ளார். தனது பீச் ஹவுஸ்க்கு அழைத்துச் சென்ற நடிகர் நடிகையிடம் தனது பல நாள் ஆசையை அரங்கேற்றியுள்ளார். அடுத்த சில நாட்களாக இருவரும் படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்லாமல், இருந்துள்ளார்கள்.

நடிகை: நினைத்ததை நடத்தி ஆச்சு, நடிகையை கழட்டி விட வேண்டியது தான் என நடிகையை கழட்டி விட்டுள்ளார். நடிகர் தான் கழட்டி விட்டது மட்டும் இல்லாமல், தனது படத்தின் இயக்குநரிடமும் தனது பீச் ஹவுஸ் சாகசத்தை கூறியுள்ளார். இதனால் இயக்குநரும் நடிகையை தனது சௌகரியத்துக்கு பிரித்து மேய்ந்துள்ளார். இப்படி இருக்கும்போது, நடிகை என்ன செய்வது எனத் தெரியாமல் அமைதியாக இருந்துள்ளார்.
அட்ஜெஸ்மெண்ட்: அதன் பின்னர் பல நடிகர்கள் இயக்குநர்கள் , தயாரிப்பாளர்கள் என பலரும் நடிகையை நடிக்க கூப்பிட்டதை விட பர்ஷ்னல் மீட்டிங் இருக்கு, கதை டிஸ்கஷன் செய்யலாம் வரீங்களா என்றுதான் கேட்டார்களாம். நடிகையும் இந்த சினிமா உலகமே இப்படித்தான் போல என நினைத்து அட்ஜெஸ்மெண்டுக்கு பழகிவிட்டார்.
முடிவு: அதன் பின்னர் சினிமாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிய நடிகை இப்போது தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தியவர்களின் முகத்திரையை கிழிக்க ஒரு முடிவு எடுத்துள்ளாராம். இது தொடர்பாக நடிகை சம்பந்தப்பட்டவர்களுக்கு நேரடியாக போன் செய்து பேசியுள்ளாராம். இதனால் நடிகை என்ன செய்யப் போகிறார் என இவரை பாலியல் ரீதியாக பயன்படுத்திய நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் திக் திக் மனநிலையில் உள்ளார்களாம்.


Click it and Unblock the Notifications











