விவாகரத்து விஷயத்தில் நடிகருக்கு மூளையாக செயல்படும் நடிகை.. ஆத்தாடி இவ்வளவு பிளானா?

By Staff

சென்னை: இந்த நடிகரும் நடிகையும் சந்தித்துக் கொள்வதற்கு முன்னரே, நடிகர் கல்யாணம், மனைவி, குழந்தைகள் என செட்டில் ஆனவர் தான். இணைந்து பணியாற்றிய முதல் படத்திலேயே இருவருக்கும் செம்ம கெமிஸ்ட்ரி ஆன் ஸ்கீரினில் ஒர்க் அவுட் ஆக, தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் இந்த நடிகரின் படத்தை கமிட் செய்தால், அந்த நடிகையிடம் தேதிகளை வாங்கிவிடுவார்களாம்.

நடிகையும் விஷயத்தை முன்னே தெரிந்து கொண்டு, நீங்கள் கேட்கும் தேதியில் நான் வேறு ஒரு படத்தில் கமிட்டாகி விட்டேன், உங்களுக்கு தேதிகள் ஒதுக்குவது சிரமமே என்றெல்லாம் கூறி தனது சம்பளத்தை தயாரிப்பாளர்களாகவே அதிகரித்துக் கொடுக்கும் படியான ஒரு திட்டத்தை அரங்கேற்றி தனது சம்பளத்தை நாளுக்கு நாள் உயர்த்தி கொண்டே இருந்தாராம்.

முதல் படத்திலேயே ஒர்க் அவுட் ஆன கெமிஸ்ட்ரி ஆன் ஸ்கிரீனை கடந்து அவர்களின் நிஜ வாழ்க்கையில் இல்லற வாழ்க்கையை பாதிக்க தொடங்கியது. இது குறித்து முதலில் திரைத்துறையில் அரசியல் புறசலான தகவல்கள் பேச்சுக்கள் அடிபட்டாலும் தொடக்கத்தில் நடிகரின் மனைவி இதை கண்டு கொள்ளவே இல்லையாம்.

நடிகருக்கும் நடிகைக்கும் நெருக்கமான பந்தம் ஏற்பட்டு பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் நடிகரின் மனைவிக்கு விஷயம் தெரிய வந்துள்ளது. பல ஆண்டுகளாக மனைவியின் தலையில் மிளகாய் அரைத்து விட்டு நடிகையுடன் ஜாலியாக ஏகபோக வாழ்க்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நடிகர், தனது மனைவிக்கு விஷயம் தெரிந்த பின்னர் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாராம்.

Tamil Cinema Gossip Actress Mastermind Works Behind Actors Divorce Case

சிக்கிய நடிகர்: விஷயத்தை நடிகையிடம் சொல்லி இதற்கு மேல் நமது உறவை தொடர்ந்தால் எனது மனைவி மானத்தையே வாங்கி விடுவார் என்று கூறியுள்ளார் நடிகர். ஆனால் நடிகையையோ உனக்கு கல்யாணம் ஆகிவிட்டது. குழந்தைகள் இருக்கிறார்கள், குடும்பம் இருக்கிறது, நமது உறவுக்கு ஒரு பிரச்சனை வந்தவுடன் என்னை கழட்டி விட்டு விட்டு, உனது குடும்பத்துடன் சென்று நீ ஐக்கியமாக தயாராகி விட்டாய். ஆனால் உனக்காகவே இத்தனை ஆண்டுகளாக நான் இருக்கிறேன், நான் எங்கே போவது என்று சென்டிமென்டாக பேசி நடிகரை தனது கைக்குள்ளேயே போட்டு வைத்துள்ளார் நடிகை.

விவாகரத்து: நடிகையின் இந்த செண்டிமெண்ட் பேச்சுக்களும் சில கண்ணீர் துளிகளும் நடிகரின் மனதை ரொம்பவும் பாதித்து விட்டதால், மனைவிக்கு தெரிந்த விஷயத்தை இனிவரும் காலங்களில் தெரியாமல் செய்ய நடிகையுடன் சேர்ந்து பல மாஸ்டர் பிளான்களை போட்டாராம் நடிகர். ஆனாலும் ஒரு கட்டத்தில் நடிகையின் நடவடிக்கைகள், நடிகரின் நடவடிக்கைகள் நடிகரின் மனைவிக்கு இவர்கள் இன்னும் திருந்தவில்லை போல என்ற தீர்க்கமான எண்ணத்தை ஏற்படுத்த, இனி விவாகரத்து தான் ஒரே வழி என்று நடிகரின் மனைவி முடிவெடுத்துள்ளார்.

இது தொடர்பாக நடிகருக்கு முறையாக நடிகரின் மனைவி தெரிவித்தாலும், அது நடிகருக்கு மகிழ்ச்சியாகவே இருந்துள்ளது. இந்த தகவலை நடிகையிடம் நடிகர் பகிர்ந்த உடன், உனது சொத்துக்களை எல்லாம் விற்று விடு பெரும்பான்மையான சொத்துக்களை உனது பெயரில் இருப்பது போல் நீ வைத்திருக்க வேண்டாம் என்றெல்லாம் சொல்லி உள்ளார். அதற்கு காரணம் இருக்கிறது விவாகரத்துக்கு பின்னர் ஜீவனாம்சம் என்ற ஒரு விஷயத்தை, உனது மனைவி முன் வைத்தால் உனது சொத்துகளின் அடிப்படையில் தான், ஜீவனாம்சம் பிரித்துக் கொடுக்கப்படும்.

மூளையாக செயல்பட்ட நடிகை: அப்படி பார்க்கையில், உனது பெரும்பாலான சொத்துக்களை விற்று விடு, அது பிற்காலத்தில் நாம் இருவரும் இணைந்து வாழும் போது உதவும் என்று நடிகருக்கு ஐடியா கொடுத்தாராம். நடிகையின் ஐடியா செம சூப்பராக நடிகருக்கு பிடித்து போக, நடிகர் அதன் பின்னர் தனது சொத்துக்களை அடுத்தடுத்து விற்று அந்த பணத்தின் மூலம் வெளிநாட்டில் முதலீடு செய்துள்ளதாக பேச்சுக்கள் அடிபடுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X