போஸ்டரில் தொடர்ந்து நடிகையை புறக்கணிக்கும் நடிகர்.. காரணம் எல்லாம் போட்டி நடிகருடனான நெருக்கமா?
சென்னை: தமிழ் சினிமாவில் எல்லா நடிகர்களும் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி, நடித்து அடுத்ததடுத்த கட்டத்துக்கு உயர்ந்து வருகிறார்கள். ஆனால் அண்ணன் - தம்பியாக வலம் வரும் நடிகர்களின் படங்கள் தொடர்ந்து ரிலீஸ் ஆவதில் சிக்கல்கள் ஏதாவது வந்து கொண்டே உள்ளது. அதுவும் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த பின்னரும் ரிலீஸ் செய்ய முடியாமல் இருக்கும் சூழல் அண்ணன், தம்பி என இருவருக்கும் நடப்பது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது எல்லாம் ஒரு புறம் இருக்க, நடிகர் தனது படத்தின் போஸ்டர்களை கடந்த ஆறு, ஏழு மாதங்களாகவே பகிர்ந்து வருகிறார். ஆனால் படத்தின் போஸ்டரில் ஒரு விஷயம் மட்டும் தொடர்ந்து இல்லாமல் இருக்கிறது. அதாவது நடிகர் பகிரும் போஸ்டரிலும் சரி, படக்குழு பகிரும் போஸ்டரிலும் சரி, நடிகையின் பெயர் மற்றும் புகைப்படம் தொடர்ந்து தவிர்க்கப்பட்டு வருகிறது.

காரணம்: இதற்கு என்ன காரணம் என்று கோலிவுட் வட்டாரத்தில் பல கதைகள் சொல்லப்படுகிறது. அதாவது நடிகருக்கும் நடிகைக்கும் இடையில் பிரச்னை வந்துவிட்டது. அதனால் தான் நடிகையின் பெயரையும் புகைப்படத்தையும் தொடர்ந்து தவிர்க்கிறார்கள் என்று கூறப்படுகிறது. அதேபோல், நடிகருக்கும் அவரது போட்டி நடிகருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில், போட்டி நடிகருக்கு ஆதரவாக நடிகை செயல்பட்டதால் நடிகையின் பெயரையும் போஸ்டரையும் நடிகர் தவிர்ப்பதாக கூறப்படுகிறது.
பகையாவே மாறிடுச்சா?: அதாவது, மாஸ் நடிகர் ஒரு பெரிய நெருக்கடிக்கு ஆளானார். அப்போது மாஸ் நடிகருக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கும்படி நடிகை, இந்த நடிகரை அணுகியதாகவும், ஆனால் இந்த நடிகரோ, மாஸ் நடிகருக்கு ஆதரவாக எல்லாம் கருத்து சொல்ல முடியாது. எனவே, இந்த விஷயத்தில் என்னிடம் நீங்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே நடந்து கொள்ளுங்கள் என்று நடிகர், நடிகையை மிரட்டி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தான் இவர்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்தி உள்ளது என்றும், இதனால் தான் நடிகையின் புகைப்படம் மற்றும் பெயரை போஸ்டரில் தொடர்ந்து தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் படக்குழு வெளியிட்ட ப்ரோமோ வீடியோவில் கூட நடிகையின் காட்சிகள் இடம் பெறாதது வேறு ஏதாவது பிரச்னை இருக்குமா என்ற கேள்வியை பலருக்கும் ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











