பிக் பாஸில் கிடைத்த புகழ்.. நடிக்க வாய்ப்பு கேட்ட நடிகை.. படுக்க கூப்பிட்ட பிரபலம்.. வெச்சு செய்த நடிகை!
சென்னை: சினிமாவில் காலடி எடுத்து வைக்க பலரும் தங்களது திறமைகளை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்கள். இதில் பல கோடி மக்களை ஒரே நேரத்தில் சென்று அடையும் நிகழ்ச்சியாக இருப்பது பிக் பாஸ். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பின்னர் அதன் மூலம் கிடைத்த வெளிச்சத்தை பயன்படுத்திக் கொண்டு இன்றைக்கு திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர்கள் பட்டியல் இந்தியாவிலேயே மிகவும் பெரியது.
அப்படி இருக்கும்போது தமிழ் பிக் பாஸில் கலந்து கொண்டு தன்னை மக்கள் மத்தியில் நன்கு பிரபலப்படுத்திக் கொண்ட நடிகை. இவருக்கு பிக் பாஸில் இருக்கும் போது ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் கிடைத்து விட்டார்கள். இதனால் வெளியே வந்ததும் இவருக்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும் எனவும் விரைவில் பல படங்களில் கமிட் ஆவார், எனவும் பலரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்தனர். அந்த நடிகையும் அதேபோல்தான் நினைத்துக் கொண்டிருந்தார்.

பாண்டிச்சேரி ட்ரிப்: முதலில் நடிகையை ஒரு பட விஷயத்திற்காக பிரபல இயக்குநர் ஒருவர் அணுகியுள்ளார். கதை சொல்லும்போது, படத்தில் நடிக்க சம்மதம் என்றால் சொல்லுங்கள், பக்கத்தில் பாண்டிச்சேரி வரைக்கும் ஒரு ட்ரிப் போயிட்டு வரலாம் எனக் கூறியுள்ளார். இதனைக் கேட்ட நடிகைக்கு முதலில் எதுவும் புரியவில்லை. அதன் பின்னர், கூடவே தயாரிப்பாளரும் வருவார், உங்களுக்கு ஓ.கேவா என்றெல்லாம் கேட்டுள்ளார். இயக்குநர் பேசியதன் நோக்கம் இப்போதுதான் நடிகைக்கு புரிந்துள்ளது.
படுக்க: அதாவது பாண்டிச்சேரி சென்று ரூம் போடலாம் எனவும் கூடவே தயாரிப்பாளரும் வருவார், மூன்று பேரும் ஜாலியா போயிட்டு வரலாம் எனக் கூறியுள்ளார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத நடிகை, உடனே அந்த இயக்குநரை கோபத்தில் பயங்கரமாக திட்டியுள்ளார். இன்னும் சொல்லப்போனால், நடிகை தனக்குத் தெரிந்த கெட்ட வார்த்தைகள் அனைத்தையும் பயன்படுத்தி, திட்டி அந்த இயக்குநரை விரட்டி அடித்துள்ளார். இன்னும் கொஞ்சம் விட்டிருந்தால் இயக்குநரை செருப்பால் அடித்து இருப்பாராம்.
ஆதங்கம்: இது தொடர்பாக தனது நட்பு வட்டத்தில் நடிகை பகிர்ந்துள்ளார். அதாவது நடிக்க வாய்ப்பு கேட்டால் காமவெறி பிடித்தவர்கள் படுக்க கூப்பிடுகிறார்கள். சினிமா இன்னும் மாறாமல் இப்படியே உள்ளதே எனக் கூறி ஆதங்கப்பட்டு கொண்டுள்ளார். அந்த இயக்குநரை எங்கு சந்தித்தாலும் முறைத்துக் கொண்டே இருக்கிறாராம் பிக் பாஸ் பிரபலம். இந்த நடிகை இருப்பது தெரிந்தால், அந்த பக்கம் நடந்து போக கூட பயப்படுகிறார் அந்த காமவெறி பிடித்த இயக்குநர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் இது எல்லாம் எங்க போய் முடியுமோ என ஆதங்கப்பட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











