குளிக்க போன இடத்தில் நடிகை பார்த்த வேலை.. விஷயம் தெரிஞ்சவங்க மிரண்டு போயிட்டாங்களாம்!
சென்னை: இந்த நடிகை மும்பையில் இருந்து தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட பட்டியலில் முக்கியமான நடிகை. ஆரம்ப காலத்திலே நல்ல கதைகளை தேர்வு செய்யும் திறன் இருந்ததாலோ என்னவோ நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து, நடித்தார். இப்போது பான் இந்தியா ஸ்டாராக மாறி நிற்கும் நடிகை, தான் குளிக்கும் போது அவர் செய்யும் விஷயங்களைப் பகிர்ந்து உள்ளார். இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
ஏற்கனவே சொன்னதைப் போல் நடிகை, மிகவும் அட்டகாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் கமர்ஷியல் படங்களில் நடித்து ஹிட் கொடுக்க, மொத்தம் தமிழ் சினிமாவும், அவரது கால்ஷீட்டுக்காக காத்துக் கொண்டு இருந்தார்கள். இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள் அவரது மொத்த கால்ஷீட்டையும் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வாங்கிவிட்டது. இதனால் ஹை பட்ஜெட் நடிகையாக மாறினார். இதற்கிடையில் இவரது படங்கள் சொதப்பியதால், மார்க்கெட் குறைந்து, சினிமாவில் இருந்து ஓரம் கட்டப்பட்டார்.

ஆனாலும் அவரது அட்டகாசமான முயற்சியினால், தமிழ் சினிமாவில் இருந்து தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக மாறினார். இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் அவருக்கு கிடைத்த வரவேற்பு மீண்டும் அவரை டாப் நடிகையாக மாற்றியது. தெலுங்கு சினிமாவில், ஹை பட்ஜெட் படங்களில் எல்லாம் அவரது பெயர் இடம் பெற்றது.
பான் இந்தியா ஸ்டார்: ஓடிடி தளங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதால், இவர் குறித்து பாலிவுட்டுக்கும் தெரியவர, தற்போது பான் இந்தியா ஸ்டாராக வலம் வந்து கொண்டு உள்ளார். மிகவும் பிசியான ஆர்ட்டிஸ்ட்டாக உள்ள அவரது கால்ஷீட் கிடைப்பது பலருக்கு கிடைக்காத ஒன்றாக உள்ளது. இவர் வந்து ஒரு பாடலுக்கு நடனமாடினால், இந்தப் படம் ஹிட் என்ற அளவிற்கு இவரது கொடி இந்திய சினிமாவின் அனைத்து மொழிகளிலும் உள்ளது.
குளிக்கும்போது: இப்படியான நிலையில் நடிகை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தான் குளிக்கும் போது தனது உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் நன்றி சொல்கிறாராம். அதுவும் ஒவ்வொரு பாகத்தையும் தொட்டுப்பார்த்து நன்றி சொல்கிறராம். அதற்கு காரணம் தனது உடல் பாகங்கள் தான் தான் இன்றைக்கு நன்றாக உள்ளேன். எனவே எனது உடல் பாகங்களுக்கு நான் நன்றி சொல்வது சரிதான். இது தனக்கு புத்துணர்ச்சி தருகிறது என பேசியுள்ளார்.
இன்ஸ்பிரேஷன்: அவரது இந்தப் பேச்சைக் கேட்ட, பலரும் நடிகை சொல்வது சரிதான். நாமும் இனிமேல் குளிக்கும்போதும் சரி, நேரம் கிடைக்கும்போது எல்லாம் நமது உடல் பாகங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என முடிவெடுத்து உள்ளார்கள். நடிகையின் இந்தப் பேட்டி, இந்தியா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த விஷயத்தை பலரும் செய்ய நடிகை ஒரு முக்கியக் காரணமாக உருவெடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











