முன்னாள் கணவரை வெறுப்பேற்றவே படுக்கையறை காட்சிகள்.. நடிகையின் தாராள கிளாமர் இன்னும் தொடருமாம்!
சென்னை: முன்னாள் கணவரை பழிவாங்குகின்றேன், வெறுப்பு ஏற்றுகின்றேன் என ஒரு நடிகை செய்துள்ள விஷயம், அவர் குறித்த பேச்சினை திரைத்துறையில் அதிகரிக்கச் செய்துள்ளது. முன்னாள் கணவரை பழிவாங்க அப்படி என்னதான் பிரச்னை, கணவரைப் பழிவாங்குகின்றேன் என நடிகை எடுத்த முடிவினைக் கேள்விப்பட்டு பலரும் அதிர்ச்சியில் உள்ளார்களாம்.
இந்த நடிகை கடந்த பல ஆண்டுகளாக மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு இவர் காலடி எடுத்து வைத்துள்ளார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகர்கள் மற்றும் நடிகைகளில் அதிக கவனத்தை ஈர்த்து வெற்றிகளைக் குவித்தவர்களாக இருப்பது பெரும்பாலும் நடிகர்களாகவே உள்ளனர். ஆனால் நடிகைகளைப் பொறுத்தவரையில் சிலர் ஒரு சீசனில் இருக்கின்றார்கள். சிலர் அதுவும் இல்லை. இப்படியான நிலையில் தான் இந்த நடிகை சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்துள்ளார்.

இவரது சினிமா என்ட்ரிக்கு பின்னால் பல ஆண்டுகள் கடின உழைப்பும் முயற்சிகளும் இருந்துள்ளது. ஆனாலும் தனக்கு கிடைத்த சினிமா வாய்ப்பை தனது முன்னாள் கணவரை பழி வாங்க சரியான ஆயுதம் இதுதான் என நினைத்து பயன்படுத்தியுள்ளாராம். அதாவது இந்த நடிகை, சின்னத்திரையில் இருந்தபோது சின்னத்திரையில் இருந்த ஒரு நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நடிகை: திருமணம் செய்து கொண்ட இவர்களது திருமண வாழ்க்கை, சில ஆண்டுகள் செம ஹேப்பியாக இருந்துள்ளது. இதற்கிடையில் நடிகையின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்தது. இது மட்டும் இல்லாமல், நடிகருக்கான மார்க்கெட் என்பது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போக, ஒரு கட்டத்தில் சின்னத்திரையில் இருந்து, அவர் முழுவதுமாக ஓரங்கட்டப்பட்டார். ஆனால் நடிகையின் மார்க்கெட் ஏறுமுகமாக இருந்தபோது , நடிகர் பல கண்டிஷன்களை நடிகைக்கு போட்டுள்ளார். அதாவது அப்படி நடிக்காதே, இப்படி நடிக்காதே என கூறியுள்ளார்.
கண்டிஷன்: இது என்னடா வம்பு என நடிகைக்கு, நடிகரின் கண்டிஷன்கள் தூக்கிவாரி போட்டுள்ளது. அதாவது, ஒரே துறையில் இருந்து கொண்டு இப்படி கண்டிஷன் போடுறாரே என செம அப்செட் ஆகியுள்ளார். கண்டிஷன்கள் அதிகமாக, நடிகரை விவாகரத்து செய்தார் நடிகை. விவாகரத்துக்குப் பின்னர் தனது துறையில் அதிக கவனம் செலுத்தியுள்ளார். எனவே நடிகைக்கு சினிமா வாய்ப்புகளும் வந்துள்ளது.
கிளாமர்: வந்த பட வாய்ப்பில், படுக்கை அறைக் காட்சிகள் இருப்பதாக இயக்குநர் கூறியதும் நடிகை ஓ.கே சொல்லியுள்ளார். அதாவது நடிகை படுக்கை அறைக் காட்சியில் நடிக்க ஒப்புக் கொள்ள காரணமே, தனது முன்னாள் கணவரை பழிவாங்க தான் என கூறப்படுகிறது. மேலும் படுக்கை அறைக் காட்சிகள், நெருக்கமான காட்சிகள், அது மட்டும் இல்லாமல் கிளாமர் காட்சிகள் என நடிகை எல்லாத்திலும் இறங்கி சிக்ஸர் விளாசியுள்ளார். நடிகையின் இந்த ஓவர் கிளாமரைப் பார்த்து திரையுலகமும் இணையமும் பல கருத்துகளைக் கூற, இதனைப் பார்த்த நடிகர் செம அப்செட்டில் உள்ளாராம். இதைத் தெரிந்து கொண்ட நடிகை செம குஷியில் உள்ளாராம். முன்னாள் கணவரை பழிவாங்க நடிகை எடுத்த முடிவினைக் கேள்விப்பட்டு பலரும் அதிர்ச்சியில் உள்ளார்களாம்.


Click it and Unblock the Notifications











