லீலை வீடியோக்களால் சிக்கிய இயக்குநர்.. மானமே போச்சு.. நடிகையின் அக்காவுக்கும் சேர்த்து கவனிப்பாம்!
சென்னை: தமிழ் சினிமாவில் பல முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த நடிகை. பக்கத்து மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும், தமிழ் சினிமாவில் அவருக்கான வரவேற்பு ஓரளவுக்கு இருந்தது. இப்படியான நிலையில் ஒரு இயக்குநருடன் ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் காதலாக மாற, இருவரும் அடிக்கடி, மீட்டிங், ஹோட்டலில் லிவிங் என இருந்துள்ளனர். அப்போது வித்தையைக் காட்டுகின்றேன் என இயக்குநர் சில பல லீலைகளைச் செய்துள்ளார். அதனை வீடியோவாக பதிவு செய்த நடிகை இப்போது அதை வைத்துத்தான் தனது வாழ்க்கையை நடத்தி வருகின்றாராம்.
நடிகை சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற பெரும் கனவோடு வந்துள்ளார். வந்தவருக்கு ஆரம்பம் எல்லாம் சிறப்பாகவே இருந்துள்ளது. பல முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடி, பல மூத்த ஹீரோக்களின் படங்களில் முக்கியமான கதாபாத்திரம் என செம பிசியாக இருந்துள்ளார். இப்படியான நிலையில்தான் அந்த இயக்குநர் கண்ணில் பட்டுள்ளார் நடிகை. அண்டை மாநிலத்தில் இருந்து வந்து இறங்கிய பெங்களூரு தக்காளி போல இருந்த நடிகைக்கு கொஞ்சம் நூல் விட்டுப் பார்த்துள்ளார் அந்த இயக்குநர்.

லீலைகள்: இயக்குநரின் பேச்சில் மயங்கிய நடிகை சூட்டிங்கே இல்லை என்றாலும், அம்மாவை விட்டுவிட்டு சூட்டிங் இருக்கு, கதை டிஸ்கஷன் இருக்கு எனக் கூறிவிட்டு வந்து இயக்குநருடன் செம டிஸ்கஷனில் ஈடுபட்டுள்ளார். நூல் விட்டுப் பார்த்ததற்கே நடிகை மயங்கிவிட, முடிந்தவரை நடிகையிடம் கறந்துவிடலாம் எனத் திட்டம் போட்டுள்ளார் இயக்குநர். நாளாக நாளாக இயக்குநரின் மொத்த கவனமும் லீலைகளிலேயே இருக்க, நடிகை கொஞ்சம் உஷாராகி, இயக்குநரை அவருக்குத் தெரிந்து சில வீடியோக்களும் தெரியாமல் பல வீடியோக்களும் எடுத்துள்ளார்.
வித்தை: இது தெரியாத இயக்குநர் நடிகையிடம் தனது மொத்த வித்தையையும் காட்டியுள்ளார். சில ஆண்டுகள் இப்படிப் போக, இயக்குநருக்கு நடிகை போர் அடித்துவிட்டது போலும், கொஞ்சம் கொஞ்சமாக நடிகைக்கு இசைவு கொடுக்காமல், அவ்வப்போது தவிர்த்து வந்துள்ளார். இயக்குநரின் பிடியில் இருந்ததால் சினிமாவில் நினைத்த இடத்தை நடிகையால் அடைய முடியவில்லை. அதன் பின்னர் எவ்வளவோ முயன்றும், நடிகையாக கம்பேக் கொடுக்க முடியவில்லை.
வீடியோ: இயக்குநர் திருமணம் செய்து கொள்வார் என நம்பிக்கொண்டு இருந்த நடிகைக்கு, ஏமாற்றம்தான் மிஞ்சியது. இயக்குநர் தற்போது வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையில் செம ஜாலியாக இருக்கின்றார். இப்படியான நிலையில்தான், நடிகை தான் எடுத்து வைத்திருந்த வீடியோக்களை ஒவ்வொன்றாக அனுப்பி மிரட்டியுள்ளார். குறிப்பாக சினிமா வாய்ப்புகளும் இல்லை, நானும் எனது அக்காவும் வாழ மாதம் எங்கள் செலவுக்கு இவ்வளவு ஆகின்றது. எனவே மாத மாதம் இவ்வளவு அனுப்பினால், அமைதியாக இருப்பேன். இல்லையென்றால் உனது மனைவிக்கு அனுப்பிவிடுவேன் எனக் கூறியுள்ளார். இதனால் வேறு வழி தெரியாமல், இயக்குநர் மாத மாதம் கணிசமான அளவு பணத்தினை அனுப்பி வருகின்றாராம். இந்தத் தொகை அக்கவுண்டில் இருந்து மாறுவதே தெரியாத அளவிற்கு கவனமாக செயல்பட்டு வருகின்றாராம் இயக்குநர்.


Click it and Unblock the Notifications











