எல்லை மீறிய நடிகரை எகிறி எகிறி குத்திய நடிகை.. தனி அறையில் நடந்த தரமான சம்பவம்
சென்னை: சினிமாவில் நடிகைகளுக்கு தொடங்கி பெண் கலைஞர்கள் என பலருக்கும் தொடர்ந்து பாலியல் தொல்லைகள் நடைபெற்று வருகிறது என்றும், அதில் அந்தந்த துறை சார்ந்த அமைப்புகளின் தலைவர்கள் கடந்து அரசும் அதில் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்து வருகிறது. இப்படி இருக்கையில் பிரபலமான நடிகை ஒருவருக்கு படப்பிடிப்புத் தளத்தில் நடைபெற்ற பாலியல் அத்துமீறல் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
படத்தின் கதை நன்றாக உள்ளது, இயக்குநரும் நல்ல மனிதர், தயாரிப்பாளரும் பிரச்னை இல்லாத தயாரிப்பாளர், நடிகருக்கும் நல்ல பெயர் உள்ளதால் அவரும் அநாவசியமாக எதுவும் செய்ய மாட்டார் என்ற எண்ணத்தில் அந்த படத்தில் கமிட் ஆகி நடித்துள்ளார் நடிகை. படப்பிடிப்பு தொடங்கிய சில வாரங்களுக்கு பின்னர் தான் அந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்றுள்ளது.

நடிகையின் மேக்-அப் அறையில்: அதாவது நடிகை படப்பிடிப்புத் தளத்தில் தனக்கென வழங்கப்பட்ட தனி அறையில் மேக்-அப் போட்டுக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த படத்தின் கதாநாயகனாக நடிக்கும் நடிகர் அங்கு வந்து நடிகையிடம் தனியாக பேச வேண்டும் என்றும், அது ஒரு பிசினஸ் டீல் என்றும் தெரிவித்துள்ளார். அதனால் தான் தானே வந்ததாகவும் இல்லை என்றால் மேனேஜரை வைத்தே பேசி இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். இதை நம்பிய நடிகை தனது உதவியாளர்களை வெளியே அனுப்பி உள்ளார். இதுவரை நடிகை மிகவும் எதார்த்தமாக தான் நடிகருடன் பழகி வந்துள்ளார்.
அத்துமீறிய நடிகருக்கு விழுந்த அடி உதை: ஆனால் நடிகையின் உதவியாளர்கள் வெளியேறியதும், நடிகையிடம் பேசிக்கொண்டு இருக்கும்போதே அவரிடத்தில் அத்துமீறி நடந்து கொண்டு, ஆபாசமாகவும் பேசியுள்ளார் நடிகர். இதைக் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத நடிகை, அதிர்ச்சியில் நடிகரைப் போட்டு தாறுமாறாக தாக்கி உள்ளார். இன்னும் சொல்லப்போனால் எகிறி எகிறி நடிகரை அடித்துள்ளார். இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத நடிகர் நடிகையின் அடுத்தடுத்த அடியால் அந்த அறையிலேயே நிலை குலைந்து போயுள்ளார். நடிகையிடம் நடிகர் வாங்கிய கும்மாங்குத்தால் நடிகர் கிட்டத்தட்ட ஒரு வாரமாக படப்பிடிப்பை கேன்சல் செய்தாராம். அந்த படத்திற்கு பின்னர் நடிகருடன் நடிகை இணைந்து நடிக்கவே இல்லை.


Click it and Unblock the Notifications











