ஆசையாக போன நடிகர்.. முதலில் பணத்தை எடுத்து வைனு சொன்ன நடிகை.. கடைசியில் எல்லாம் ஸ்வாக!

By Staff

சென்னை: இந்த நடிகர் இப்போதுதான் வளர்ந்து வரும் நடிகர். இவரும் குட்டிக்கரணம் போட்டு நடிக்கிறார், படங்கள் வெற்றி பெற்றாலும் இன்னும் பெரிய ஹீரோ என்ற அந்தஸ்து திரையுலகில் கிடைக்கவில்லை என யோசித்துக் கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில்தான் அவருக்கு நெருக்கமான நடிகர் தம்பி ஒருவர், இப்படித்தான் ஆரம்ப காலத்தில் ஹிட் கொடுத்தும் பெரிய ஹீரோ என்ற அந்தஸ்தை பெற முடியாமல் தவித்த போது, நம்பர் நடிகைக்கு ஜோடியாக நடித்து தனது ஹீரோ அந்தஸ்தை உயர்த்தினார். எனவே இந்த நடிகரும் அதே ரூட்டை பின்பற்றலாம் என யோசித்து தற்போது சிக்கலில் மாட்டியுள்ளார்.

அந்த நடிகர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வந்தாலும் சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் ஹீரோ மெட்டீரியலாக மாறினார். இவரது நடிப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போகவே, பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். அதேபோல் இவருக்கென திரையுலகில் சில கோடிகள் ரொட்டேஷன் செய்யும் அளவுக்கு உயர்ந்து விட்டார். வெற்றி நடிகர்களின் வரிசையில் அவர் இடம் பெற்றாலும், தமிழ் சினிமாவின் உச்சத்திற்குச் செல்ல வேண்டும் என்கிற எண்ணம் வந்து இவரது ஆட்டம் கொஞ்சம் ஓவராக மாறிவிட்டதாம்.

Tamil Cinema Gossip Actress Who Buy Too Much Of Salary Form Actor

அந்த நடிகைதான் வேண்டும்: அதாவது படத்திற்கு கதை சொல்ல யார் வந்தாலும், கதாநாயகியாக அவங்களை புக் பண்ணுவீங்களா? அப்படின்னா சொல்லுங்க நாம இந்த படத்தை பண்ணுவோம், இல்லையினா பக்கத்து ஸ்டேட்ல இருந்து கூட மார்க்கெட்டில் ஓடுகிற குதிரையாக இருக்கும் நடிகை யாராவதைக் கூட்டிக் கொண்டு வாங்க, நாம சேர்ந்து படம் பண்ணலாம் என்று ரொம்பவும் ஸ்ட்ரிக்டாக சொல்லி விடுகிறாராம். ஹிட் கொடுத்தாக வேண்டும் என்ற நெருக்கடியில் இருந்த இயக்குநர் ஒருவர், பக்கத்து மாநிலத்துக்கு பறந்து அங்கு ஒரு நடிகையை சந்தித்து கதைச் சொல்லி உள்ளார்.

ஜொள்ளு விட்ட நடிகர்: நடிகை கதையை கேட்டுவிட்டு, கதை நல்லா இருக்கு நான் நடிக்கிறேன், சம்பளமாக இவ்வளவு வேண்டும் என லம்ப்பாக ஒரு அமவுண்ட்டைச் சொல்லி உள்ளார். இயக்குநரோ, நடிகை இவ்வளவு கேட்கறாங்க என நடிகருக்கு போன் போட்டு சொல்ல, நடிகர் அந்த நடிகைனா இன்னும் கூட சேர்த்து தருவேன் எனக் கூறியுள்ளார். இயக்குநரும் நடிகை கேட்ட சம்பளத்திற்கு அவரை கமிட் செய்து அட்வான்ஸாக கையோடு கொண்டு போயிருந்த சில லட்சங்களை கொடுத்துள்ளார். நடிகையும் வாங்கிக் கொண்டுள்ளார். அதன் பின்னர் தான் படத்தில் உங்களுக்கு ஜோடியாக இந்த நடிகர் தான் நடிக்கிறார் என்று கூற, நடிகை கொஞ்சம் ஷாக் ஆகியுள்ளார். அதே நேரத்தில் கேட்ட சம்பளத்தில் பைசா குறைக்காமல் தருகிறேன் என்று கூறிவிட்டார்கள், பேசாமல் நடிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளார்.

கோடிகளை அமுக்கிய நடிகை: படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சில நாட்களிலேயே இருவரும் தள்ளித் தள்ளி தான் இருந்துள்ளார்கள். நடிகரின் ஆக்டிவிட்டியைப் பார்த்த நடிகை, நடிகருடன் கொஞ்சம் நெருங்கினால், இன்னும் கொஞ்சம் சேர்த்து கறக்கலாம் போல எனத் திட்டமிட்டு நெருங்கி பழகியுள்ளார். நடிகை நினைத்தது போலவே நடிகரிடம் சில கோடிகளை அபேஸ் செய்துள்ளார். படப்பிடிப்பு முடிந்த பின்னர் நடிகரை கொஞ்சம் கூட கண்டுக்க வில்லையாம் நடிகை. இதை வெளியே சொன்னால் மானம் போகும், பணம் போனது போனதாகவே இருக்கட்டும் என நெருங்கிய வட்டத்தில் புலம்பி வருகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X