இயக்குநரே வேண்டாம்னு சொல்லியும் கிளாமராக வந்த நடிகை.. எல்லாம் அதுக்குத்தானாம்.. சூடான ஷூட்டிங் ஸ்பாட்
சென்னை: இந்த நடிகை இப்போது தமிழ் மற்றும் மலையாளத்தில் கவனம் செலுத்தி வருகிறார். பாலிவுட் பக்கம் ஒரு வாய்ப்பு கிடைத்ததால் போயிட்டு வந்தவரை பாலிவுட் கொஞ்சம் கூட கண்டுகொள்ளவில்லை. இப்போது முன்னணி நடிகையாக இருக்கும் இவர் ஆரம்ப காலத்தில் செய்த அழிச்சாட்டியங்கள் ரொம்பவும் ஓவராக இருந்துள்ளது. அப்படி ஒரு படத்தில் அந்த நடிகை செய்த அழிச்சாட்டியம் பலரையும் வியக்க வைத்துள்ளது.
இந்த நடிகை பக்கத்து மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர். டாப் நடிகையாக வலம் வரவேண்டும் என இந்த நடிகை செய்த விஷயங்கள் ரொம்பவும் அதிகம். நடிகை தமிழ் சினிமாவில் கால் பதித்து சில ஆண்டுகளுக்கு உள்ளாகவே ஒரு நடிகருடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தார். இவர்களுக்கு இடையிலான பழக்கம், இவர்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைத்துக் கொண்டே வந்ததால், நடிகை நடிகரே கதி என இருந்தார். எங்கு ஷுட்டிங் இருந்தாலும் வீக் எண்ட் என்றால் நடிகருடன் பார்ட்டி, ஹோட்டல் என செம ஜாலியாக இருந்துள்ளார்.
சில காரணங்களால் நடிகரைப் பிரிந்த நடிகை, ஏற்கனவே திருமணம் ஆன இயக்குநருடன் டேட் செய்து வந்துள்ளார். டைவர்ஸ் மட்டும் செய்துவிட்டு வாங்க, நாம சேர்ந்து வாழலாம் என நடிகை போட்ட கண்டிசனுக்கு முதலில் ஓ.கே. சொன்ன இயக்குநர், நடிகையை தன்னால் முடிந்த அளவுக்கு கசக்கி பிழிந்து எடுத்து விட்டு, கழட்டி விட்டுள்ளார். இதனால் நடிகை என்ன செய்வது எனத் தெரியாமல் இருந்தார். அப்போது அந்த நடிகைக்கு ஏற்ற மற்றொருவர் வர, இப்போது அவருடன் சேர்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார். விவரம் தெரிந்தவர்கள் நடிகையோடு வந்து ஒட்டிக் கொண்டவர்தான் வாழ்கிறார் எனக் கூறுகிறார்கள்.

கிளாமர்: படம் முழுவதும் இந்த நடிகைக்கு ஹோம்லியான டிரஸ்கள் கொடுத்துள்ளார்கள். இதனால் நடிகை ஒருமுறை ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வரும்போது, செம கிளாமர் துணிகள் அணிந்து வந்துள்ளார். எந்த அளவிற்கு கிளாமர் என்றால், ஹாலிவுட் லெவலுக்கு செம கிளாமராக வந்துள்ளார். இதனைப் பார்த்த இயக்குநர் ஷாக்காகி உள்ளார். என்னம்மா, இப்படி வந்திருக்க எனக் கேட்டதற்கு, ஆமாம் சார்.. நீங்க படம் முழுவதும் என்னை ஹோம்லியாகவே காட்டிக் கொண்டு இருக்கிறீர்கள். நான் மக்கள் மத்தியில் ரீச் ஆக வேண்டும் என்றால் கிளாமராக சில காட்சிகள் இருந்தால்தான் சார் நன்றாக இருக்கும் எனக் கூறியுள்ளார். நடிகையின் இந்த பேச்சு இயக்குநருக்கு தூக்கி வாரிப் போட்டுள்ளது.
அந்த மாதிரி படம்: அதன் பின்னர் இயக்குநர் செம கோபத்தில் நீ கிளாமராக தான் நடிக்க வேண்டும் என்றால் போய், அந்த மாதிரி படம் எடுப்பவர்கள் படத்தில் நடி, என்னோட படத்துல அதுக்கு இடமே இல்லை என கோபமாக கத்தியுள்ளார். அதன் பின்னர் உதவி இயக்குநர்கள் அருகில் இருக்கும் கடைக்குச் சென்று, துணிகளை வாங்கி வந்து நடிகையை அணியச் சொல்லி, படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள். அந்த படத்திற்கு பின்னர் அந்த இயக்குநர் பல வெற்றிப் படங்களை கொடுத்து விட்டார், ஆனால் ஒரு படத்தில் கூட அந்த நடிகையை சேர்க்கவில்லை.


Click it and Unblock the Notifications











