ஹோம்லினு பேர் எடுத்து யாருக்கு என்ன பயன்.. ரூட்டை மாற்றிய நடிகை.. ஒரு ரவுண்டு வர முடிவாம்!

By Staff

சென்னை: இந்த நடிகை பலருக்கும் பிடித்தவராக உள்ளார். ஆனால் இனி வரும் காலங்களில் பசங்களுக்கு மட்டும் பிடித்த நடிகையாக இருந்தால் போதும் என முடிவெடுத்து விட்டார் என கூறப்படுகிறது. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த இந்த நடிகை சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல், தவித்து வருகிறார். எனவே, நடிகை ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்துள்ளார்.

சின்ன நம்பர் நடிகை என அழைக்கப்படும் இந்த நடிகை, இதுவரை நடித்த அனைத்து படங்களிலும், ஹோம்லியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்தார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்ததால் மக்கள் மத்தியில், இருக்கும் அபிப்ராயமும் அன்பும் கெடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார்.

tamil cinema gossip cinema gossip kolly wood gossip

இதன் காரணமாக தனது கதாபாத்திரங்களை மிகவும் கவனத்துடன் தேர்வு செய்து நடித்து வந்தார். இதனாலோ என்னவோ நடிகையின் டேஸ்ட்டுக்கு ஏற்ற கதாபாத்திரங்கள் இவருக்கு வந்து கொண்டு இருந்தது. தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்துக் கொடுத்து நல்ல நடிகை என திரைத்துறையிலும், வசீகரமான நடிகை என ரசிகர்கள் மத்தியில் பெயர் எடுத்தார்.

வேற ரூட்: ஆனால், நடிகைக்கு இப்போது பட வாய்ப்புகள் அதிகம் வருவதில்லையாம். தனது கால் ஷீட் எல்லாம் சும்மாவே இருக்கின்றதாம். எனவே நடிகை இப்போது ஒரு பிளான் போட்டுள்ளார். அதாவது, வரும் காலங்களில் நடிகை கிளாமரில் ஒரு ரவுண்டு வர முடிவெடுத்துள்ளாராம். அதனால்தான், வரும் காலங்களில் கிளாமராக நடிக்க முடிவெடுத்துள்ளாராம். அதற்காக செம கிளாமரான போட்டோ சூட்களை நடத்தி, தனது, சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றார்.

செம கிளாமர்: இதுமட்டும் இல்லாமல், சில எக்ஸ்க்ளூசிவான கிளாமர் புகைப்படங்களை சில தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்துள்ளாராம். இவரது எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்களைப் பார்த்த இயக்குநர்களும் தயாரிப்பு நிறுவனங்களும் ஆடி போய்விட்டார்களாம். சில இயக்குநர்களும், சில தயாரிப்பு நிறுவனங்களும் கட்டாயம் அழைப்பதாக கூறியுள்ளார்கள். எனவே, வரும் காலங்களில் சின்ன நம்பர் நடிகை கிளாமரிலும் ஒரு கலக்கு கலக்குவார் என பேச்சுகள் அடிபடுகின்றது.

ஹோம்லி: நடிகையின் இந்த முடிவை கேள்வி பட்டவர்கள், பொழைக்கத் தெரிந்த நடிகை எனவும், ஹோம்லி ஆர்ட்டிஸ்ட் என பெயரெடுத்து யாருக்கு என்ன பயன்? ஒரு நடிகை எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்த வேண்டும். அந்த வகையில், இந்த நடிகை வரும் காலங்களில் கிளாமரிலும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X