நல்லா நடிப்பேன்.. வாய்ப்பு தரமாட்டிங்கறாங்க.. இனி இந்த வழியில போனா தான் நடிகை பிழைக்க முடியுமாம்!
சென்னை: இந்த நடிகை தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகமான இளம் நடிகை. முதல் படத்திலேயே பலரது பாராட்டையும் விருதுகளையும் குவித்தார். மெச்சத்தகுந்த நடிப்பை முதல் படத்திலேயே வெளிப்படுத்தியதால் நடிகைக்கு அடுத்தடுத்து விரைவாக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் நடிகைக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. மாறாக கிடைத்த படங்களில் நடிகை நடித்தார்.
திறமையான நடிகையை அவரது நடிப்புக்கு தீனி போடும் படங்களே கிடைத்தது. ஆனால் அவையெல்லாம் போதுமான அளவில் கிடைக்கவில்லை. நடிகை ஒரு படத்தில் கமிட் ஆகிறார் என்றாலே அந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு ஒரு நம்பிக்கை இயல்பாகவே ஏற்பட்டது. நடிகையும் சில ஆண்டுகள் மிகவும் குறைவான படங்களிலேயே நடித்தார். ஆனால் இப்போது நடிகைக்கு மிகவும் குறைவான பட வாய்ப்புகள் தான் கிடைக்கிறதாம். அதுவும் வரும் வாய்ப்புகள் அனைத்தும் படத்தின் குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கு தான் கிடைக்கிறதாம்.
இப்படி இருந்தால் முத்திரை குத்தி திரைத்துறையில் ஓரங்கட்டப்பட்டு விடுவோம் என உஷாரான நடிகை இப்போது தனது ரூட்டை மாற்றியுள்ளாராம். அதாவது நடிகை கிளாமரில் நடிக்க, அதுவும் தாறுமாறான கிளாமரில் நடிக்க முடிவெடுத்துள்ளாராம். இது தொடர்பாக தனக்கு நெருங்கிய இன்னொரு நடிகையின் அறிவுரையை கேட்டுத்தான் இந்த நடிகை இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளாராம். அதற்காக நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறாராம்.

கிளாமர் பக்கம்: நடிகையின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடீரென கிளாமர் பக்கமாக மாறவும் அந்த நடிகை கொடுத்த ஐடியா தான் காராணமாம். அந்த நடிகை கொடுத்த ஐடியாவை இந்த இளம் நடிகை ரொம்பவும் ஓவராக பின்பற்றி வருகிறார் என கூறப்படுகிறது. பொதுவாக நடிகைகள் கிளாமராக புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்த நடிகை கிளாமராக வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
உள்ளாடையோடு நடனம்: அதுவும் உள்ளாடையுடன் நடனமாடும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறாராம். இதைப் பார்த்த ஐடியா கொடுத்த நடிகை ரொம்பவும் ஷாக் ஆகிவிட்டாராம். நாலு அடி பாய சொன்னா எட்டு அடி பாயுறாளே என ஷாக் ஆகி நடிகையை தொடர்பு கொண்டுள்ளார். அதற்கோ அந்த நடிகை கிளாமர் என களமிறங்கிய பின்னர் தி பெஸ்ட் கிளாமர் கொடுக்க வேண்டும் எனக் கூறினாராம். இது குறித்து விபரம் தெரிந்தவர்கள், எப்படி வந்த நடிகையை இந்த திரையுலகம் இப்படி மாற்றிவிட்டுடுச்சே என்று பேசி வருகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











