சின்ன வயது நடிகையிடம் அத்துமீறிய நடிகர்.. ஊருக்கு மட்டும் உபதேசம்.. கேரவன் கூத்து!

By Staff

சென்னை: இந்த நடிகை இன்றைக்கு இந்திய அளவில் பலருக்கும் தெரிந்த நடிகையாக வளர்ந்து நிற்கிறார். ஆனால் இந்த நடிகையிடம் அவர் இளம் வயதில் இருக்கும்போது நடிகர் ஒருவர் ஏகப்பட்ட சேட்டை செய்துள்ளார். அதாவது நெருக்கமான காட்சிகள் படத்தில் இடம் பெறவில்லை என்றாலும் பரவாயில்லை, தனக்கும் நடிகைக்கும் அப்படியான காட்சிகளை அதிகம் எடுக்கச் சொல்லி உள்ளார். அதன் மூலம் நடிகை தன் வலையில் வீழ்த்த திட்டமிட்டுள்ளார்.

இந்த நடிகை வடக்கிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நடிகை என்றாலும், தமிழ் ரசிகர்கள் மத்தியில் நடிகைக்கு இருந்த, இருக்கிற மவுசே தனி. தான் அறிமுகமான புதிதில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து அவார்ட் வின்னிங் படங்களில் நடித்துக் கொண்டு இருந்த நடிகை அதன் பின்னர் இது வேலைக்கு ஆகாது கொஞ்சம் ரூட்டை மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்து, கிளாமர் காட்சிகள் நடிக்க சம்மதம் தெரிவித்தார்.

Tamil Cinema Gossip Actress Who Faced Abuse at Shooting Spot By Actor

நடிகை கிளாமராக நடிக்க தானே சம்மதம் தெரிவித்துள்ளாரே தவிர, நடிகரின் காம இச்சைக்கு தன்னை பலிகடாவாக மாற்றத் தயார் என்று கூறவில்லை. நடிகரோ லேடீஸ் விஷயத்தில் கொஞ்சமல்லாம் இல்லாமல் அதிகமாகவே வீக். அவருடன் ஒரு படத்தில் நடித்த நடிகை அடுத்த படத்தில் நடிக்க ரொம்பவும் யோசிப்பார். காரணம் நடிகரின் சேட்டைகளும் லீலைகளும் அப்படி.

நடிகரின் வெறி: இப்படி இருக்கும்போது இன்றைக்கு பான் இந்தியா ஸ்டாராக வளர்ந்துள்ள நடிகை நடிருடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, இன்னொரு படத்திலும் கமிட் ஆகி அட்வான்ஸ் வாங்கிவிட்டார். இப்படி இருக்கும்போது, அந்த நடிகர் நடிகையை தன் ஆசைக்கு பலிகடாவாக மாற்ற சில பல முயற்சிகளை செய்துள்ளார். அதாவது, ரிகர்சலில் நெருக்கமான காட்சிகளில் ஆட்சேபனை இல்லாதது போலவும், டேக்கில் நடிகை மீது தனது காம வெறியை காட்டுவது போலவும் நடந்து கொண்டுள்ளார். தொடக்கத்தில் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்துள்ளார் நடிகை.

தொல்லை: நடிகருக்கு ஸ்விட்ச் போட்டதும் லைட் எரிவது போல, நடிகைக்கு லைட்டா சிக்னல் கொடுத்தாலே தனது ஆசைக்கு கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்க கூடியவர். ஆனால் இந்த நடிகை அப்படியான டைப் இல்லாததால், நடிகையை தன் வலையில் வீழ்த்த, நடிகையின் கேரவனுக்கே சென்றுள்ளார் நடிகர். அதன் பின்னர் நடிகையை தனது ஹெஸ்ட் ஹவுஸ் பார்ட்டிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஷாக்: இதைக் கேட்ட நடிகைக்கு செம ஷாக், அதன் பின்னர் தான் நடிகைக்கு நடிகரின் மோடிவ் தெரிந்துள்ளது. அதன் பின்னர் நடிகை நடிகரிடம் செம கோபமாகவும் எரிச்சலாகவும் பேசி உள்ளார். இயக்குநரிடமும் கூறி, நடிகருக்கும் தனக்கும் நெருக்கமான காட்சிகள் இல்லாமல் இனி படம் எடுங்க எனக் கூறியுள்ளார். நடிகரோ என்னடா இப்படி மானத்த வாங்கி விட்டுட்டாங்க இந்த நடிகை என கப்சிப் என அடங்கியுள்ளார். ஆனால் இந்த நடிகர் ஊருக்கு உபதேசம் செய்வதை தனது படம் ரிலீஸ் ஆகும்போது தவறாமல் செய்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X