கேரவனுக்குள் நடந்த அந்த விஷயம்.. நடிகையால் கட்டுப்படுத்தவே முடியலய.. எப்படியோ சாமாளிச்சுட்டாங்களாம்!
சென்னை: இந்த நடிகை இன்றைக்கு மோஸ்ட் வான்டட் நடிகையாக வலம் வருகிறார். எந்த படமாக இருந்தாலும் சரி தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் கற்பிக்க தன்னால் முடிந்த அளவிற்கு நடிப்பினை வெளிப்படுத்த கூடியவர். ஹோம்லி என்றால் 100 சதவீதம் ஹோம்லி, கிளாமர் என்றால் தனக்கு அருகில் யாருமே நிற்க கூடாது என நினைக்கும் அளவிற்கு கிளாமராக நடிப்பவர்.
ஒரு படத்தில் தான் கமிட் ஆகிவிட்டால், படம் முழுக்க வருகிறாரோ அல்லது பாதி படத்திற்கு வருகின்றாரோ, ஒரு காட்சிக்கு வருகிறாரோ அல்லது ஒரு பாடலுக்கு நடனமாடுகின்றாரோ அதை பற்றியெல்லாம் கவலைப் படுவதில்லை. காரணம் தனக்கான ஸ்கிரீன் ஸ்பேஸில் பக்காவாக ஸ்கோர் செய்து அசத்திவிடுவார். உச்சநடிகர்களே இவரது கால் ஷீட்டுக்காக இப்போது காத்துக் கொண்டு உள்ளார்கள்.

நடிகை முதலில் தென்னிந்திய சினிமாவில் ஒரு நடிகருடன் செம நெருக்கமாக இருந்தார். நடிகரும் நடிகையே கதி எனக் கிடந்தார். இருவரும் ஜோடி சேருவார்கள் என நினைத்துக் கொண்டு இருக்கும்போது, இருவருக்கும் இடையில் பிரேக் அப் நடக்கவே, நடிகை தமிழ் திரையுலகில் இருந்து கொஞ்ச காலம் தள்ளியே இருந்தார். அதற்கு காரணம் அந்த நடிகர் தான் என அப்பட்டமாக அப்போது தெரிந்தது.
கேரவன்: நடிகை தற்போது இந்திய அளவில் மிகவும் முக்கியமான நடிகையாக மாறிவிட்டார். அதில் அவர் தனது படங்களில் வரும் பாடல்களுக்கு போடும் ஆட்டம், அவர் கமிட்டான படத்தை உலக அளவில் டிரெண்ட் ஆகி விடுகின்றது. இப்போது நடிகை ஒரு வடமாநில நடிகருடன் காதலில் இருக்கின்றார் என கூறப்படுகின்றது. இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுவது, தனிமையில் சந்தித்து அதிக நேரம் செலவிடுவது என இவர்கள் விவகாரம் தொடர்பாக அவ்வப்போது புகைச்சல் ஏற்பட்டும் வருகிறது.
கட்டுப்படுத்த முடியல: இப்படியான நிலையில், நடிகை, ஒருமுறை படப்பிடிப்பில் இருந்தபோது அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது, படப்பிடிப்புக்காக தயார் ஆகிக் கொண்டு இருந்துள்ளார் நடிகை. அப்போது, அவரது மன அமைதியை முற்றிலுமாக சிதைக்கும் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால், நடிகையால் தனக்கு வந்த அழுகையை கட்டுப்படுத்த முடியலயாம். ஆனால் இந்த நேரத்தில் தனக்கு ஏற்பட்ட துயரத்தை நினைத்து அழுது கொண்டு இருந்தால் அது சரியாக இருக்காது.
கேன்சல்: படப்பிடிப்புக்கு நேரம் ஆகிவிட்டது. எனவே இப்போது, படத்தில் நடிப்பதுதான் சரி என முடிவெடுத்து, அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் கட்டுப்படுத்தி, படத்தில் நடிக்கச் சென்றுள்ளார் அந்த நடிகை. நடிகையின் இடத்தில் யார் இருந்தாலும் இவ்வாறு செய்வார்களா என்றால் அது ஆச்சரியம்தான். உச்ச நட்சத்திரமாக உள்ள நடிகை நினைத்திருந்தால், ஷூட்டிங்கை கேன்சல் செய்யச் சொல்லி இருக்கலாம். ஆனால் நடிகை அவ்வாறு செய்யாமல் படத்தில் தொடர்ந்து நடித்துள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.


Click it and Unblock the Notifications











