புருஷனால் அவமானப்படும் மூத்த நடிகை.. எவ்வளவு சொல்லியும் திருந்தலையாம்.. ஒரே தலைவலி!

By Staff

சென்னை: இந்த நடிகை 90களில் இறுதியிலும் 2000களின் தொடக்கத்திலும் தமிழ் சினிமா மட்டும் இல்லாமல், தென்னிந்திய சினிமாவில் கலக்கிக் கொண்டு இருந்த நடிகை. இன்றைக்கும் இந்த நடிகை என்றால் ஒரு தனி மதிப்பும் மரியாதையும் அங்கீகாரமும் தமிழ் சினிமா கொடுத்துக் கொண்டுதான் உள்ளது. மூத்த நடிகையாக உள்ள இவருக்கு பிரச்சனையே நடிகையின் கணவர் தானாம்.

அதாவது நடிகை தான் பணியாற்றிய படத்தில் உதவி இயக்குநராக இருந்தவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அன்றைக்கு மார்க்கெட்டில் மிகவும் முக்கியமான நடிகை, உச்ச நடிகையாக பார்க்கப்பட்ட நடிகை, திடீரென மிகவும் எளிமையாக திருமணம் செய்து கொண்டது பலருக்கும் ஷாக் தான். சரி, நடிகை யோசித்து எடுத்த முடிவாகத்தான் இருக்கும். எப்படியோ நன்றாக இருந்தால் சரிதான் என்று பலரும் வாழ்த்தினார்கள்.

தனது திருமணத்திற்குப் பின்னர் வெகு சில படங்களில் மட்டும் நடித்த நடிகை அதன் பின்னர் குடும்ப வாழ்க்கைக்காக படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். இப்படி இருக்கையில் இவர்களின் குழந்தைகள் நன்கு வளர்ந்து விட்டார்கள். தற்போது நடிகை குணச்சித்திர கதாபாத்திரங்களில் ரீ என்ட்ரி கொடுத்து அசத்தி வருகிறார். நடிகை தமிழ் சினிமாவில் தனக்கு இருக்கும் அங்கீகாரத்தையும் மரியாதையும் நாளுக்கு நாள் பெருக்கிக் கொண்டே இருக்கிறார். இப்படி இருக்கையில் நடிகையின் கணவர், ஏதோ காலண்டரில் பெயர் குறித்து வைத்தது போல ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நடிகரை திட்டித் தீர்த்து வருகிறராம்.

Tamil Cinema Gossip Actress Who Feeling Very Bad About Her Husband Recent Days Activities

ஒரே தலைவலி: அதுவும் அவர் சொல்லும் காரணங்களும் கருத்துக்களும் கொஞ்சம் கூட ஒப்பாமல் இருப்பதுடன், தன்னைத் தானே மேதாவி என்று அவர் காட்டிக் கொள்ள விரும்புவது போல இருக்கிறது என்று பலரும் கழுவி ஊற்ற ஆரம்பித்துவிட்டனர். இது தொடர்பாக நடிகையும் எடுத்துக் கூறியும், நான் தலைகீழாகத்தான் குதிப்பேன் என்று இயக்குநர் சொல்லிவிட்டாராம். எவ்வளவு சொல்லியும் திருந்தாத மனுஷனைக் கட்டிக் கொண்டு அழும் நிலை வந்துவிட்டதே என்று நடிகை உச்சகட்ட வருத்தத்திலும் கோபத்திலும் இருக்கிறாராம்.

புலம்பல்: ஒரு கட்டத்தில் தனது கணவரை பேட்டி எடுக்க யாரும் வரவேண்டாம் என்று முன்னணி சேனல்களுக்கு நடிகையே நேரடியாக சொல்லி உள்ளராம். இப்படியான நிலையில் நடிகையின் கணவர், சின்ன சின்ன யூடியூப் சேனல்களுக்கு தானே போன் செய்து, பேட்டி கொடுக்கிறேன் வாங்க என்று சொல்லி பஞ்சாயத்தைக் கூட்டி வருகிறாராம். எல்லாம் எங்கு போய் முடியுமோ என்று நடிகை பதட்டத்துடனே இருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X