நடிகரோடு இரண்டு முறை மிஸ் ஆகிடுச்சு.. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லைனு ஒரே கவலையாம்
சென்னை: தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் இளம் நடிகை ஒருவருக்கு, முன்னணி நடிகருடன் திரையை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு இரண்டு முறை தேடி வந்தும், இரண்டு முறையும் கைநழுவிப் போய்விட்டதாம். அதனால், "கைக்கு எட்டியது வாய்க்கு எட்டல" என்ற மனநிலையில்தான் அந்த நடிகை இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேச்சு கிளம்பியுள்ளது.
சமீபத்தில் தனது புதிய படத்தின் புரொமோஷனில் கலந்து கொண்ட அந்த நடிகையிடம், ரசிகர்கள் அதிகமாக கேட்ட கேள்வியும் அந்த முன்னணி நடிகரை பற்றிதான். அதற்கு மனம் திறந்து பேசிய நடிகை, "அவருடன் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தேன். ஆனால், இரண்டு முறையும் அந்த படங்கள் அடுத்த கட்டத்திற்கே செல்லாமல் நின்றுவிட்டது. ஷூட்டிங் கூட தொடங்கவில்லை" என்று வருத்தத்துடன் கூறியதாக தகவல்.
அதோடு, "இப்போது அவருடன் எந்த படமும் இல்லை. இனிமேல் அதைப் பற்றி அதிகமாக எதிர்பார்த்து ஏமாற விரும்பவில்லை. அது நடக்க வேண்டுமென்றால் சரியான நேரத்தில் நடக்கும். அந்த முடிவை காலத்திடமே விட்டுவிட்டேன்" என்றும் அவர் கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த பேட்டி வெளியான பிறகு, அந்த நடிகரின் ரசிகர்கள்தான் சமூக வலைதளங்களில் இதை அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள். "மூன்றாவது முறை கண்டிப்பாக அந்த கூட்டணி நடக்கும்", "இந்த காம்போவை திரையில் பார்க்க காத்திருக்கிறோம்" என்று தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
சினிமா வட்டாரத்திலும், "இரண்டு முறை தவறிய கூட்டணி மூன்றாவது முறையாவது இணைந்தால் ரசிகர்களுக்கு நல்ல சர்ப்ரைஸாக இருக்கும்" என்ற பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில், வாய்ப்பு இரண்டு முறை வந்தும் கைநழுவியதால், அந்த நடிகைக்கு மட்டும் இன்னும் அந்த வருத்தம் முழுமையாக போகவில்லை என்றும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications