வாரிசு நடிகை எடுத்த தாரள முடிவு.. ஆர்தடாக்ஸ் கணவர் போட்ட கறார் உத்தரவு.. எங்க போய் முடியுமோ?
சென்னை: தமிழ் திரையுலகில் குடும்பப்பாங்கான நடிப்பிற்குப் பெயர் பெற்ற அந்த வளர்ந்து வந்த நடிகை, தற்போது தனது திரைப்பயணத்தில் மிக முக்கியமான நெருக்கடியைச் சந்தித்து வருகிறார். திருமணத்திற்குப் பிறகு ஒரு சிறிய இடைவெளி விட்டு மீண்டும் வந்த அவருக்கு, முன்னர் எதிர்பார்த்த 'ரெட் கார்பெட்' வரவேற்பு கிடைக்கவில்லை. முன்னணி இளம் நடிகைகளின் கடும் போட்டி காரணமாக, தனது இடத்தை நிலைநிறுத்த அவர் எடுத்த ஓர் அதிரடி முடிவுதான் இப்போது கோலிவுட்டின் முக்கியப் பேசுபொருளாக மாறியுள்ளது.
குடும்பப் பாங்கான வேடங்கள் மட்டுமே இனி போதாது என்றும், ட்ரெண்டுக்கு ஏற்றபடி சற்று தாராளமான நடிப்பை வெளிப்படுத்தினால் தான் திரையுலகில் நீடிக்க முடியும் என்றும் நடிகை முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. இதற்காகப் பல லட்சம் ரூபாய் செலவில் மும்பையிலிருந்து வரவழைக்கப்பட்ட புகைப்படக் கலைஞர்களைக் கொண்டு, முற்றிலும் புதிய, படு கவர்ச்சியான தோற்றத்தில் 'மேக் ஓவர்' போட்டோஷூட் ஒன்றை ரகசியமாக நடத்தினார் என்றும் கூறப்படுகிறது. இந்தப் புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு, திரையுலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்ப்பதே அவரது லட்சியம்.
இந்தத் தகவல் நடிகையின் கணவர் காதுகளுக்குச் செல்ல, அங்கே பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. சினிமா பின்புலம் இல்லை என்றாலும் நடிகையின் கணவர் மற்றும் அவரது குடும்பம் ரொம்பவும் ஆர்தடாக்ஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், "எங்கள் குடும்பப் பெயருக்கும், கௌரவத்திற்கும் இழுக்கு ஏற்படும் வகையில் கவர்ச்சி காட்டக்கூடாது" எனத் தனது பாணியில் கறாரானத் தடையை விதித்தாராம். "நடிப்பு என்பது வெறும் கலைதான், ஆனால் அது எல்லை மீறக்கூடாது" என்று அவர் போட்ட முட்டுக்கட்டை, நடிகையை முற்றிலும் நிலைகுலையச் செய்துள்ளது.

அட்வான்ஸ் வாங்கிய நடிகை: ஏற்கனவே சில பெரிய பட்ஜெட் படங்களில் கிளாமரான காட்சிகளில் நடிக்க ஒப்புக்கொண்டு, அதற்கான அட்வான்ஸையும் பெற்றிருந்தார் நடிகை. கணவரின் இந்த திடீர் தடை அவருக்குப் பேரிடியாக அமைந்தது. "திறமை இருந்தும், காலத்திற்கேற்ற மாற்றங்களைச் செய்ய விடாமல் இப்படித் தடுத்தால் நான் எப்படி அடுத்த கட்டத்திற்கு நகர முடியும்?" என அவர் தனது நெருங்கிய நண்பர்களிடம் ஆதங்கத்துடன் புலம்பி வருகிறாராம்.
நோ கிளாமர்: தற்போது நடிகையின் நிலைமை 'முன்னோக்கிச் செல்லவோ, பின்வாங்கவோ முடியாமல்' தவிப்பதாகக் கூறப்படுகிறது. கணவர் தரப்பிலோ, "குணச்சித்திர வேடங்களில் வேண்டுமானால் நடியுங்கள், ஆனால் கவர்ச்சி வேண்டாம்" என்பதில் உறுதியாக இருக்கிறார். நடிகையோ, "இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே என்னால் கதாநாயகியாகத் தொடர முடியும், அதற்கு இந்த மாற்றம் அத்தியாவசியம்" எனத் தனது வாதத்தை முன்வைத்து போராடி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
குடும்பச் சண்டை: இதனால் தம்பதிகளுக்கு இடையே ஒரு லேசான 'பனிப்போர்' மூண்டுள்ளது. வாங்கிய அட்வான்ஸ் தொகையைத் திரும்பக் கொடுப்பதா அல்லது கணவரைச் சமாதானப்படுத்திவிட்டுத் துணிந்து களமிறங்குவதா என்கிற குழப்பத்தில் நடிகை தவித்து வருகிறார். இந்த விவகாரம் தற்போது சினிமா வட்டாரத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. "குடும்பமா? கரியரா?" என்ற விவாதத்தில் இறுதியாக அந்த நடிகை எந்தப் பக்கம் சாயப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











