ஐம்புலன்களையும் அடக்கி வாசிக்கும் நடிகர்.. முடியாதுனு அடம்பிடிக்கும் நடிகை.. எல்லாம் அதுக்குத்தான்!

By Staff

சென்னை: இந்த நடிகர் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்திலேயே ஓவர் ஆட்டம் போட்டவர். ரொம்பவும் இளம் வயதிலேயே சினிமாவில் காலடி எடுத்து வைத்துவிட்டார். இப்படி இருக்கும்போது நடிகர் தன்னுடன் நடித்த நடிகையின் வசியத்தில் கிறங்கிப் போய் நடிகையே கதி என்று இருந்தவர். படங்கள் தொடர்ந்து பிலாஃப் ஆனாலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் நடிகையுடன் நெருக்கமாக இருந்தாலே நிம்மதி என்று இருந்தவர்.

இப்படி இருக்கும்போது, ஒரு கட்டத்தில் அந்த நடிகை கொஞ்சம் போரடித்து விட, நடிகையை நைசாக கழட்டி விட்டுவிட்டு சினிமாவில் கவனம் செலுத்தி வந்துள்ளார். நடிகருக்கு பல மேனேஜர்கள் இருந்துள்ளார்கள். அவர்கள் எல்லாம் ஒரு கட்டத்தில் நடிகரின் இந்த நடிகை மோகம் குறித்து ஏதாவது பேசினால் அடுத்த படத்திலேயே மேனேஜரை மாற்றிவிடுவாராம். இப்படியான நடிகருக்கு தான் அவருக்கு ஏற்றபடி ஒரு மேனேஜர் வந்து சேர்ந்துள்ளார்.

Tamil Cinema Gossip Actress Who Force To Actor For Personal Meeting

அதாவது இந்த மேனேஜர் வந்து சேரும் போதே நடிகருக்கு இன்னொரு நடிகையுடன் நெருக்கமான உறவு இருந்துள்ளது. இதைத் தெரிந்து கொண்ட மேனேஜரோ, நடிகையுடன் நீங்க அங்க போனால் யாருக்கும் தெரியாது. இங்க போனால் யாருக்கும் தெரியாது என்று பயங்கரமான வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். இந்த நடிகையுடன் நெருக்கமாக இருக்கும்போது நடிகருடன் நடித்த இளம் நடிகை மீதும் நடிகருக்கு கொஞ்சம் ஆசை வர, நடிகரோ, படப்பிடிப்புத் தளத்திலேயே தனது கேரவனுக்கு வரச் சொல்லி நடிகையுடன் கொஞ்சம் மனம் விட்டுப் பேசியுள்ளார்.

நடிகரின் லீலை: ஆனால் இந்த நேரம் போதாது என்று நடிகர் சொன்னதால் நடிகரின் மனதை புரிந்து கொண்ட மேனேஜரோ, கடற்கரை ஓரமாக ஒரு பெரிய வீடு ஒன்றைப் பார்த்துக் கொடுத்துள்ளார். இருவரும் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அந்த வீட்டில் வீக் எண்டில் மட்டும் சந்தித்து பேசிக் கொள்வார்களாம். என்னதான் புது புது நடிகைகளுடன் நெருங்கிப் பழகினாலும் நடிகருக்கு மனதிற்கு ரொம்பவும் நெருக்கமாக மாறிவிட்டாராம் அந்த இரண்டாவது நடிகை. இதனால் இரண்டாவது நடிகை எப்போது அழைத்தாலும் நோ சொல்லாமல் சந்தித்துவிட்டு தான் வருவாராம். நடிகையும் அப்படித்தான் இருந்துள்ளார்.

அடம்பிடிக்கும் நடிகை: இப்படி இருக்கையில் நடிகர் தற்போது சினிமா மட்டும் இல்லாமல், பணம் சம்பாதிக்க வேறு ஒரு தொழிலில் கவனம் செலுத்தி வருகிறாராம். இப்படி இருக்கும்போது நடிகை நடிகரை விடாமல் டார்ச்சர் செய்து தனிமையில் சந்திக்க வேண்டும் என்று குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருக்கிறாராம். நடிகருக்கும் நடிகையை சந்திக்காமல் இருப்பது கஷ்டமாக இருந்தாலும் தனது ஐம்புலன்களையும் அடக்கி வைத்துக் கொண்டு இருக்கிறாராம். ஆனால் நடிகையோ நடிகரின் நிலை தெரியாமல் ஓவராக ஆட்டம் போட்டுக் கொண்டு இருக்கிறாராம். இது எல்லாம் எங்கு போய் முடியுமோ என்று நடிகரின் மேனேஜர் தான் புலம்பிக் கொண்டு இருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X