ஒளிமயமான எதிர்காலத்தை காட்டுறேன்னு கூட்டிட்டுப் போய் சீரியல் நடிகையை நாசமாக்கிய இயக்குநர்!
சென்னை: இந்த நடிகை சீரியலில் கலக்கிக் கொண்டு இருந்த நடிகை. சீரியலிலேயே இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் கிடைத்து விட்டார்கள். இப்படி இருக்கும்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து கலக்கியவர்கள் பட்டியலில் உன்னையும் சேர்க்கிறேன் எனக் கூறி இந்த நடிகையை ஒரு இயக்குநர் பார்க்க வந்துள்ளார். நடிகையோ முதலில் அவாய்ட் செய்து வந்துள்ளார். அதன் பின்னரும் இயக்குநர் விடாமல் நடிகையை உசுப்பேற்றிக் கொண்டே வந்துள்ளார்.
அந்த நேரம் பார்த்து மற்றொரு சீரியல் நடிகை சினிமாவில் காலடி எடுத்து வைக்க, இந்த நடிகைக்கும் ஆசை வந்துவிட்டது. அந்த இயக்குநரோ அடுச்சது ஜாக்பாட் என நடிகையை சினிமாவில் அது ஆக்குகிறேன், இது ஆக்குகிறேன் எனக் கூறி நடிகையை அழைத்துக் கொண்டு அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டு இருந்துள்ளார். இயக்குநரை நம்பி, தன் வசம் இருந்த சீரியல் வாய்ப்புகளையும் நடிகை விட்டுவிட்டு வந்துளார்.
இந்த இயக்குநர் சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாக நடிகையை அலையவிட, நடிகைக்கு கொஞ்சம் டவுட் வந்துவிட்டது. அதன் பின்னர் சும்மா இருந்தா அவ்வளவுதான் என முடிவெடுத்த நடிகை தானாகவே இன்னொரு இயக்குநரை சென்று சந்தித்து நடந்ததைப் பற்றி பேசியுள்ளார். பேயிடம் இருந்து தப்பித்து காட்டேரியிடம் மாட்டுக் கொண்டதைப் போல, அந்த இயக்குநரோ நடிகையை அட்ஜெஸ்மெண்ட்க்கு அழைத்துள்ளார். இதைக் கேட்ட நடிகைக்கு உச்சகட்ட ஷாக். அட்ஜெஸ்மெண்ட் செய்துதான் நான் வாழவேண்டும் என்ற நிலையில் இல்லை. அதையெல்லாம் எப்போதே நான் கடந்துவிட்டேன் என முகத்திலேயே துப்பிவிட்டு வந்துவிட்டாராம்.

குழப்பத்தில் நடிகை: சின்னத்திரை வாய்ப்பும் போச்சு, வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைப்பது என்ற முடிவில் இருந்த உறுதியை மட்டும் நடிகை விடவேயில்லை. அண்டை மாநிலத்திற்கு போன நடிகைக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனைப் பயன்படுத்திக் கொண்ட நடிகை, இப்போது தமிழிலும் காலடி எடுத்து வைத்து கலக்கி வருகிறார். அவரது நடிப்பில் வெளியான படத்தில் நடிகை ஓவர் கிளாமராக நடித்திருந்தார். இவரது கிளாமருக்காகவே படம் ஓடியது எனக் கூறப்பட்டது. இதனால் பலரும் நடிகையை கிளாமர் கதாபாத்திரத்தில் நடிக்கச் சொல்லி கேட்டுள்ளார்கள்.
நடிகையின் முடிவு: ஆனால் நடிகையோ ஆரம்பத்தில் மறுத்துள்ளார். அதே நேரத்தில் மேற்கொண்டு படங்கள் எதுவும் நடிகைக்கு அமையாததால், தற்போது நடிகையும் கிளாமருக்கு ரூட்டை திருப்பியுள்ளாராம். இதனால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹோம்லியான கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறாராம். நடிகையின் இந்த நிலையைக் கேள்விப்பட்டவர்கள் சின்னத்திரையில் எப்படி இருந்த நடிகை, இப்போது எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது என புலம்பி வருகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











