நடுராத்திரியில் நடிகைக்கு போன் போட்ட இளம் பிரபலம்.. நீ தான் வேணும்னு அடம் பிடிச்சாராம்!
சென்னை: இந்த நடிகை இப்போதுதான் தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை. தமிழில் அவர் காலடி எடுத்து வைத்த படமே பெரிய தயாரிப்பாளரின் படம். இதனால் நடிகைக்கு தமிழ் திரையுலகில் தனி மவுசு ஏற்பட்டது. நடிகை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் கலக்கி வருகிறார். எப்படியும் இரண்டு ரவுண்டுக்கு மேல் தாங்குவார் என்று பலரும் நடிகையை பாராட்டி வருகிறார்கள். இப்படி இருக்கையில் சில மாதங்களுக்கு முன்னர் நடிகை குறித்து பரவிய தகவல்கள் பலருக்கும் ஷாக் கொடுத்தது.
அதாவது நடிகை வீக் எண்ட் பார்ட்டிகளுக்கும் இரவு பார்ட்டிகளுக்கும் பல லட்சங்கள் சர்வீஸ் சார்ஜாக வசூலிக்கிறாராம். நடிகைக்கு நெருக்கமான வட்டத்தில் இருந்தே அவருக்கு இந்த பார்ட்டி அழைப்புகளும் இரவு சர்வீஸ் அழைப்புகளும் வந்துவிடுகிறது என்று எல்லாம் பேச்சுக்கள் அப்போது அடிபட்டது. இப்படி இருக்கையில் நடிகை பேட்டி ஒன்றில் நான் அப்படிபட்ட பொண்ணு இல்லை. என்னைப் பார்த்து எப்படி அப்படி கூறினார்கள் என்று நிச்சயமாக புரியவில்லை என்று கூறி அழுதேவிட்டார்.

நள்ளிரவில் நடிகைக்கு அழைப்பு: இந்த பேச்சுக்கள் எல்லாம் தீவிரமாக அடிபட்டுக் கொண்டு இருந்த காலத்தில், நடிகையை இளம் பிரபலம் ஒருவர் நள்ளிரவில் தொடர்பு கொண்டு, எக்காரணம் கொண்டும் எனது கோரிக்கையை நிராகரிக்க வேண்டாம், ஏற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் தான் அதற்கு சரியான ஆள், எனவே எனக்கு அதை நீங்கள் தான் செய்ய வேண்டும் என்று மொட்டத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல உளறி உள்ளார்.
நடிகையின் தீர்க்கமான முடிவு: முதலில் ஷாக் ஆன நடிகை, விவரத்தை தெளிவாக சொல்லுப்பா என்று கூற, அதன் பின்னர், அடுத்ததாக அந்த இளம் பிரபலம் செய்யவுள்ள மினி பிராஜக்ட்க்கு நடிகை நடித்துக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தாராம். நடிகையும் யோசித்து சொல்வதாக கூறி விட்டு, அதன் பின்னர் சரி என்று கூறினார். தற்போது அந்த பிராஜக்ட் வெளியாகி பெரிய அளவில் ஹிட் அடித்துவிட்டதால், இனி அந்த இளம் ரத்தம் எப்போது அழைத்தாலும் சரி என்று சொல்வதில் உறுதியாக இருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











