நடிகைக்கு ஒரே அசிங்கமா இருக்காம்.. அடுத்தடுத்து உளறிக் கொண்டு இருக்கும் கணவரால் ஒரே தொல்லையாம்!
சென்னை: இந்த நடிகை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த நடிகை. அவரது பெயரைச் சொன்னாலே ரசிகர்கள் மத்தியில் தனி மதிப்பும் மரியாதையும் இருந்து வந்தது. இவர் ஒரு படத்தில் நடித்த போது, அந்த படத்தில் உதவி இயக்குநராக பணியற்றியவரை காதலித்தார். அதன் பின்னர் அவரது இயக்கத்திலேயே சில படங்களில் நடிக்கவும் செய்து, கடைசியில் அவரை திருமணமும் செய்து கொண்டார். நடிகையின் இந்த முடிவு பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. ஆனாலும் நடிகையும் அந்த இயக்குநரும் இல்லற வாழ்க்கையில் நிம்மதியாக வாழ்ந்து வந்தார்கள்.
இருவருக்கும் குழந்தைகள் பிறந்து அவர்கள் இருவரும் தோளுக்கு மேல் வளர்ந்து விட்டார்கள். இப்படி இருக்கும்போது நடிகையின் கணவரான அந்த இயக்குநர் செய்யும் சில வேலைகள் நடிகைக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். அதாவது நடிகர் வீட்டை ஒட்டியுள்ள நிலத்தில் விவசாயம் பார்த்துக் கொண்டிருந்தவரை மிகவும் நிம்மதியாக இருந்ததாம்.

அப்செட்டில் நடிகை: அதன் பின்னர் சில யூடியூப் சேனல்களுக்கு அவர் பேட்டி கொடுத்ததும் கூட அவர் செய்த விவசாயத்தைப் பற்றியதாகத்தான் இருந்தது, அதுவும் ஒரு வகையில் பிரச்னை இல்லாமல் தான் இருந்ததாம். ஆனால் அதன் பின்னர் திரைத்துறையில் உச்சத்தில் இருப்பவர்களை மோசமாக விமர்சித்து பேட்டி கொடுத்து வருவது நடிகைக்கு தர்மசங்கடமான சூழலை ஏற்படுத்தி உள்ளதாம். அதாவது பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை, அவர்களின் திறமை உள்ளிட்டவற்றை எல்லாம் தேவையில்லாமல் விமர்சிக்கிறாராம். இது நடிகைக்கு பெரும் தர்ம சங்கடமான சூழலை ஏற்படுத்தி வருகிறதாம்.
நடிகை பார்த்த வேலை: இது தொடர்பாக இயக்குநரிடம் எடுத்துச் சொன்னாலும், அவர் அதைப் புரிந்து கொள்ளாமல் தான் பேசியது இத்தனை வியூவ்ஸ் போயுள்ளது, இத்தனை லைக் வந்துள்ளது என்று பதில் சொல்லி வருகிறாராம். இயக்குநரின் இந்த பதிலைக் கேட்ட நடிகை அதிர்ச்சி ஆகி தனது தலையில் அடுத்துக் கொண்டு நெருங்கியவர்களிடம் புலம்பி வருகிறாராம். இது மட்டும் இல்லாமல், தனக்கு தெரிந்த வட்டத்தில் சொல்லி, பிரபலமான யூடியூப் சேனல்களுக்கு போன் செய்து இயக்குநரை வரும் காலங்களில் பேட்டி எடுக்க வராதீர்கள் என்று கோரிக்கை வைத்து வருகிறாராம். இயக்குநரின் சமீபத்திய நடவடிக்கைகளால் நடிகை மிகுந்த அப்செட்டில் இருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











