நடிகரோடு நடிகை டீப் நெருக்கமா?.. ஊரே கேளு நாடே கேளுனு சந்தி சிரிக்குது.. புகைச்சல் ஓவரா இருக்கேப்பா

By Staff

சென்னை: இந்த நடிகை தனது சிறு வயதிலேயே ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்க்கும் வகையில் செய்திகளிலும் திரையுலகிலும் இடம் பிடித்தார். கதாநாயகிக்கு ஏற்ற அம்சங்கள் எல்லாம் நடிகைக்கு இருக்கிறது என்று பலரும் பேச, கதாநாயகியாக உருவெடுத்தார் நடிகை. தென்னிந்திய சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

நடிகைக்கும் ஒரு நடிகருக்கும் இடையில் காதல் இருக்கிறது என்ற கிசுகிசு கடந்த பல ஆண்டுகளாகவே திரையுலகில் அடிபடும் பேச்சாக இருக்கிறது. அதுவும் நடிகருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி தோளுக்கு மேல் இரண்டு வாரிசுகள் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போதும் நடிகர் எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் நடிகையுடன் உறவு பாராட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

அதுவும் நடிகரும் நடிகையும் நெருங்கிப் பழகும் தகவல்கள் குறித்து சிலர் நடிகரின் மனைவி வசம் கூறி உள்ளனர், நடிகரை வெச்சு விளாசி உள்ளார். நடிகரின் அப்பா, அம்மா, குழந்தைகள் என எல்லார் முன்னிலையிலும் நடிகர் நடிகையுடன் நெருக்கமாக பழகுகிறார் என்று குற்றம் சுமத்தி உள்ளார். நடிகரோ முதலில் மறுப்பு தெரிவித்தாலும், நடிகரின் மனைவி நம்பவில்லையாம். நடிகரோ நாங்கள் நண்பர்கள் தான் வேறு எந்த உறவும் எங்களுக்குள் இல்லை என்று கூறியுள்ளார்.

Tamil Cinema Gossip Actress Who Have Relationship With Married Actor

நடிகை முடிவு: இவ்வளவு நடந்த பின்னர் சில மாதங்கள் மட்டும் எந்த பேச்சு வார்த்தையும் இல்லாமல் இருந்துள்ளார். ஆனால் நெருங்கிப் பழகும் போது, நடிகை நடிகரிடம் தான் யாரையும் திருமணம் செய்து கொள்ளப் போவது இல்லை. எனக்கு சிங்கிள் லைஃப் பிடிச்சிருக்கு என்று தெரிவித்துள்ளாராம். நடிகரும் தனது தோழி என்பதால் அவ்வப்போது ஏதாவது சர்ப்ரைஸ் கிஃப்ட் எல்லாம் கொடுப்பாராம்.

வெளியேறிய நடிகரின் மனைவி: நடிகரும் நடிகையும் நட்புடன் பழகி வந்தது பிடிக்காத நடிகர் திருந்துவதாக இல்லை என்று முடிவெடுத்த நடிகரின் மனைவி, அவரோடு வாழ்வதே வேஸ்ட் என்று முடிவெடுத்து விலகி விட்டாராம். இப்படி இருக்கையில் நடிகரின் மனைவி பிரிந்த விவகாரம் மெல்ல மெல்ல கசியத் தொடங்க, அதற்கு ஏற்றது போல நடிகரைச் சந்திக்க அடிக்கடி படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்கிறாராம் நடிகை.

புகைச்சலைக் கண்டுகொள்ளாத நடிகை: இதனால் நடிகரின் சொந்த வாழ்க்கை இப்படி சீரழிந்து போக நடிகை தான் காரணம் என்று எல்லாம் நடிகையை மோசமாக விமர்சித்து வருகிறார்கள். இந்த விவகாரம் இப்போது ஊரே கேளு நாடே கேளு என்று கண், காது, மூக்கு வைத்து யார் யாரோ என்னென்னமோ பேசிக் கொள்கிறார்கள். ஆனால் நடிகை இதுக்கு எல்லாம் ரியாக்ட் செய்யாமல் அமைதியாக இருப்பது பலரது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக உள்ளது என்ற பேச்சு எழுந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X