நம்பர் நடிகைக்கு ஆப்பு அடித்த அக்கட தேசத்து நடிகை.. செட்பேக் அடிக்க காரணமே அதுதானாம்!
சென்னை: இந்த நடிகை மலபார் நாட்டில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர். வந்த புதிதில் நடிகர்கள், இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு இருந்த நடிகை இப்போது தனது நடவடிக்கைகளை மொத்தமாக மாற்றிக் கொண்டுள்ளார். அதாவது மற்றவர்கள் தனது பேச்சை கேட்க வேண்டும் என நினைத்து மிதப்பில் இருக்கிறார்.
இது மட்டும் இல்லாமல், படங்கள் ரிலீஸ் ஆகவில்லை என்றால் ஏதாவது சர்ச்சைக்குரிய விஷயங்களை செய்து கிட்டத்தட்ட இரண்டு வாரத்திற்கு டாக் ஆப் த டவுனாக மாறி வருகிறார். இதில் நடிகை அண்மையில் ஒரு நடிகருடன் நேரடியாக மோதுகிறேன் என செய்த விஷயங்கள் எல்லாம் அவருக்கு பின் விளைவுகளாக மாறிக் கொண்டு உள்ளது. இது போதாது என நடிகை ஒரு விழாவில் வேண்டும் என்றே அந்த நடிகரின் கண் முன் அமர்ந்து உனக்கு நிஜ வாழ்க்கையில் நான் தான் வில்லி என சொல்லாமல் சொல்லியுள்ளார்.
இது மட்டும் இல்லாமல், நடிகை தொடர்ந்து அந்த நடிகரை அல்லது அந்த நடிகருக்கு நெருக்கமானவர்களை சீண்டிக்கொண்டே உள்ளாராம். அதேபோல் நடிகை தன்னை கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு பட்டப் பெயரைச் சூட்டிக் கொண்டு வலம் வந்தார். ஒரு பெரிய நடிகரின் படத்தில் நடிக்கும் போது கூட தனக்கும் தனது பட்டப் பெயரைப் போட வேண்டும் என சண்டைக்கு நின்றுள்ளார். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், இந்த நடிகை ஆரம்பத்திலேயே, ஒரு படத்தில் செம கிளாமர் உடை அணிந்து ஷூட்டிங்கிற்கு வந்துள்ளார். இயக்குநர் ஏன் என்று கேட்டதற்கு, இப்படி நடித்தால்தான், மக்கள் மத்தியில் நல்ல அறிமுகம் ஆக முடியும் எனக் கூறினாராம். அதில் இருந்து, அந்த நடிகையை இயக்குநர் தனது படத்தில் சேர்க்கவில்லை.

அக்கட தேசம்: நடிகை தற்போது போட்டுக் கொண்டு சுற்றும் பட்டப் பெயரை அக்கட தேசத்தில் இருக்கும் ஒரு நடிகைக்கு அங்கிருக்கும் சினிமா துறையினர் இந்த நடிகை போட்டுக் கொண்ட பட்டப் பெயரைப் போட்டு படத்தை எடுத்து வருகிறார்கள். இந்த விவரத்தை தெரிந்து கொண்ட நடிகை, அந்த படக்குழுவினருடன் சண்டைக்குச் சென்றுள்ளார். ஆனால் அக்கட தேசத்தை சேர்ந்தவர்கள், நாங்கள் இப்படித்தான் செய்வோம். நீங்க நடித்த படங்களை விட இந்த நடிகை நடித்த படங்களின் வெற்றியும் கலெக்ஷனும் அதிகம் எனவே நாங்கள் இந்த நடிகைக்கு சூட்டியுள்ள பட்டப் பெயரை மாற்ற மாட்டோம் எனக் கூறியுள்ளார்கள்.
கிண்டல்: இவர்களின் இந்த பதிலை கொஞ்சமும் எதிர்பார்க்காத நடிகை, என்ன செய்வது எனத் தெரியாமல் கொஞ்ச நாட்களாக செம அப்செட்டில் இருந்துள்ளார். அதன் பின்னர்தான், இந்த பட்டப் பெயர் வேண்டாம் என முடிவெடுத்தாராம். நடிகையின் இந்த முடிவைக் கேட்ட அக்கட தேசத்து சினிமா குழுவினரை விட கோலிவுட்டில் பலரும் சிரிக்கிறார்களாம். பாம் இவங்களே வைப்பாங்களாம், அப்புறம் அவங்களே எடுப்பாங்களாம் என கிண்டல் அடுத்து வருகிறார்கள். மேலும் நடிகையைப் பிடிக்காத சிலர் இந்த நடிகைக்கு இது எல்லாம் வேண்டும், அவர்கள் போட்ட ஆட்டத்திற்கு இன்னும் நிறைய சந்திப்பார்கள் எனவும் தொடர்ந்து கமெண்ட் அடித்து வ்ருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











