வடக்கே போய் வாய் கிழிய வசனம் பேசிய நடிகை.. இப்போது புருஷனே அதே தப்பை செய்யும் போது கப்சிப்

By Staff

சென்னை: இந்த நடிகை தமிழ் சினிமாவில் இருந்து தான் தனது சினிமா கெரியரை தொடங்கினார். ஓவர் ஆக்டிங்கிற்கு பெயர் பெற்ற நடிகை இவர். 2000களில் முன்னணி நடிகையாக விளங்கியவர்களில் ஒருவர். தன்னுடன் நடித்த நடிகருடன் ஏற்பட்ட பழக்கம், நட்பாகவும், காதலாகவும் மாற, அதன் பின்னர் பெரும் எதிர்ப்புகளை கடந்து இருவரும் திருமணமும் செய்து கொண்டார்கள். இப்படி இருக்கையில் இன்றைக்கு நடிகரும் நடிகையும் கோலிவுட்டில் சிறந்த ஜோடி என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறார்கள்.

நடிகை தனது திருமணத்திற்குப் பின்னர் நடிக்கவே இல்லை. பலரும் கோரிக்கை வைத்துப் பார்த்தனர். அப்போதும் நடிக்க வரவில்லை. இப்படி இருக்கும்போது, நடிகை கடந்த 6,7 ஆண்டுகளுக்கு மேலாக மீண்டும் சினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படி இருக்கும்போது, நடிகைக்கு பாலிவுட்டில் சில வாய்ப்பு கிடைக்கவே, அங்கேயும் போய் முயற்சி செய்து பார்க்கலாம் என்று சென்றார்.

Tamil Cinema Gossip Actress Who Never Made A Question Against Her Husband s Conscious Mistake

வடக்கே ஓவர் வாய்: அங்கேயும் நடிகைக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வரவே, உடனே தென்னிந்திய சினிமா மீது விமர்சனங்களை அள்ளி வீசினார். இவரது விமர்சனங்கள் பலவும் நியாயமான விமர்சனங்களாக இருந்தது. அதாவது, தான் நடித்த பல படங்களின் போஸ்டரில் தனது புகைப்படமே இருக்காது. அந்த அளவுக்கு தென்னிந்திய சினிமா ஆணாதிக்க சினிமாவாக இருக்கிறது என்று விமர்சித்தார். நடிகையின் இந்த விமர்சனம் ஏற்புடையதுதான். அப்படி இருக்கும்போது, நடிகையின் கணவரே தற்போது நடிகை குறிப்பிட்ட அதே தவறைச் செய்கிறார் எனும்போது, நடிகை கப்சிப் என்று அமைதியாக இருப்பது கேள்விக்குள்ளாகி உள்ளது.

கேள்விகள்: அதாவது நடிகையின் கணவர் நடித்து முடித்துள்ள படத்தில் முன்னணி நடிகை ஒருவர் நடித்துள்ளார். ஆனால் நடிகர் தனது படத்தின் போஸ்டர் மற்றும் வீடியோ புரோமோசன்களில் நடிகையின் முகத்தை அல்லது நடிகையின் புகைப்படத்தை பயன்படுத்தவே இல்லை. நடிகர் தொடர்ந்து இதைச் செய்து வருவதால் நடிகை படத்தில் நடித்துள்ளாரா இல்லையா என்ற கேள்விகள் கூட ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால் வடக்கே சென்று வாய் கிழிய வசனம் பேசிய நடிகை இப்போது தனது கணவர் செய்து வரும் இப்படியான விஷயங்களைக் கூட தட்டிக் கேட்காமல் இருக்கிறாரே என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X