இனி வாயைக் கொடுத்து புண் ஆக்கிக்க விரும்பல.. அரசியல் புகழ் பாடிய நடிகையின் திடீர் பல்டி
சென்னை: சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்த நடிகை ஒருவர், கடந்த சில ஆண்டுகளாக ஒரு அரசியல் தலைவரின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஆதரவாக வீடியோக்களை வெளியிட்டு வந்தது அனைவரும் அறிந்த விஷயம்தான்.
அந்த தலைவரின் அரசியல் பயணம் தொடங்கிய காலம் முதல் தேர்தல் பிரசாரம், பொதுக்கூட்டம், அரசியல் அறிவிப்பு என எது நடந்தாலும் உடனுக்குடன் ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வந்தார். இதனால் அந்தக் கட்சி ஆதரவாளர்கள் மத்தியிலும் அவருக்கு தனி அடையாளம் உருவானது.
ஆனால் காலம் மாறியதோ, சூழல் மாறியதோ தெரியவில்லை. சமீபகாலமாக அந்த அரசியல் தலைவரின் செயல்பாடுகள் குறித்து சமூக வலைதளங்களில் எழுந்து வரும் விமர்சனங்களுக்குப் பிறகு, முன்புபோல் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க நடிகை தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

முன்பெல்லாம் எந்த நிகழ்வாக இருந்தாலும் உடனடியாக வீடியோ வெளியிடும் அவர், இப்போது அதுபோன்ற பதிவுகளை மெதுவாகக் குறைத்து வருவதாக சமூக வலைதள வாசிகள் கவனித்து வருகின்றனர். அரசியல் தொடர்பான விஷயங்களில் கருத்து சொன்னாலே தேவையில்லாத சர்ச்சைகளில் சிக்க நேரிடும் என்பதால், "இனி வாயைக் கொடுத்து புண்ணாக்கிக் கொள்ள வேண்டாம்" என்ற மனநிலைக்கே அவர் வந்துவிட்டாராம்.
இனிமேல் முழு கவனமும்: இதனால், அரசியல் பதிவுகளைத் தவிர்த்து, தனது மாடலிங், போட்டோஷூட் மற்றும் தனிப்பட்ட அப்டேட்களில் மட்டும் கவனம் செலுத்தும் முடிவை எடுத்துள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. ஒருகாலத்தில் தீவிர ஆதரவாளராக இருந்தவர், தற்போது "கழுவுற மீனில் நழுவுற மீன்" போல எந்தப் பக்கமும் பிடிக்காமல் அமைதியாக நகர்கிறாரே என கோலிவுட் வட்டாரங்களில் பேச்சு கிளம்பியுள்ளது.
இதுவும் ஒரு காரணமா?: மேலும் நடிகைக்கு அந்த அரசியல் புள்ளியிடம் இருந்து வரவேண்டியது முறையாக வந்து சேராததும் ஒரு காரணம் என்றும் பேச்சுக்கள் அடிபடுகிறது. இதனால் நடிகை இனிமேல் இது ஒர்க் - அவுட் ஆகாது எனவே நாம் இந்த ரூட்டை மாற்றினால் தான் சர்வைவ் ஆக முடியும் என்று முடிவு எடுத்துள்ளதாகவும் பேச்சுக்கள் அடிபடுகிறது.


Click it and Unblock the Notifications