செல்ஃப் எடுக்காத வண்டி என்பதால்தான் ஒத்துக்கொண்டாராம் நடிகை.. மூனு மாசம் சமாளுச்சா போதுமாம்!
சென்னை: இந்த நடிகர் அடுத்தடுத்த தோல்விப் படங்களுக்குப் பின்னர் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கி, அதன் பின்னர் அதில் இருந்து வெளியே வந்தார், இன்னும் சொல்லப்போனால் வெளியே கொண்டு வரப்பட்டார். இவர் இந்த ஆண்டில் இதுவரை ஒரு படம் கூட கமிட் ஆகாமல் உள்ளார். இப்படியான நிலையில் ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் படத்தில் கமிட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அவர் கமிட் ஆகி உள்ள படத்தில் கமிட் ஆகியுள்ள நடிகை நடிகர் குறித்து ரொம்பவும் மட்டமான அபிப்ராயம் தான் வைத்துள்ளாராம்.
அதாவது இந்த நடிகை கடந்த சில ஆண்டுகளாக தான் ஸ்பாட் லைட்டில் அதிகம் காணப்படுகிறார். இது மட்டும் இல்லாமல் நம்பிக்கைக்குரிய நடிகையாகவும் உருவெடுத்துள்ளார். இப்படி இருக்கும்போது, இவர் தற்போது கமிட் ஆகியுள்ள படத்தின் கதாநாயகன் ரொம்பவுமே விவகாரமான நடிகர். அதாவது பல கசமுசா சம்பவங்களுக்கும் இந்த நடிகருக்கும் தொடர்பு உள்ளது என ஒருமுறை நடிகை ஒருவர் கூறியது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது.

ஓவர் பார்ட்டிகள்: இப்படி இருக்கும்போது இவர் கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்து வருகிறார். அதுவும் அவரது உடல் நலப் பிரச்னைகள் குறித்து சொல்லவே வேண்டாம் எனக் கூறும் அளவுக்கு செய்திகளில் இடம் பிடித்து வருகிறார். அவரது இந்த நிலைக்கு காரணமே, ஓவராக பார்ட்டிகள், நடிகைகளுடன் அவுட்டிங், டேட்டிங் போன்றதுதான் எனவும் கூறப்படுகிறது.
சில்மிஷ வேலைகள்: இப்படியான நிலையில் இவர் இனிமேல் சினிமாவில் கம்பேக் கொடுக்கவே வாய்ப்பில்லை என்று எல்லாம் கூறப்பட்டது. இப்படி இருக்கும்போதுதான் இந்த நடிகர் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்த நடிகருக்கு உள்ள ராசி என்னவென்றால், இவருடன் ஒரு படத்தில் நடித்த நடிகை மீண்டும் அவருடன் சேர்ந்து நடிக்க யோசிப்பாராம். அதற்கு காரணம் அவரது சில்மிஷ வேலைகள் தான் எனக் கூறப்படுகிறது.
செல்ஃப் எடுக்காத வண்டி: இப்படி இருக்கும்போது இவருடன் தற்போது ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ள நடிகை குறித்த பேச்சுகள் பலரது மத்தியில் உள்ளது. அதாவது, நடிகர் குறித்து நடிகை மிகவும் மோசமான கமெண்ட்களை தனது நெருங்கிய வட்டத்தில் கூறி வருகிறாராம். அதாவது, அதுவே செல்ஃப் எடுக்காத வண்டி, ஒரு மூனு மாசம் நான் சமாளுச்சுட்டா போதும் எனக் கூறி வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











