கண்டுகொள்ளாத தொழிலதிபர் கணவர்.. கம்பி நீட்ட ரெடியான நடிகை?.. மெயின் மேட்டரே இதுதானாம்
சென்னை: இந்த நடிகை தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தனக்கென தனி இடத்தைப் பதித்தவர். இப்படிப்பட்ட இந்த நடிகை ஒரு கட்டத்தில் இதுக்குமேல சினிமாவில் இருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி, இளமை இருக்கும் போதே திருமணத்தை முடித்து விட வேண்டும் என தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடந்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் நடிகைக்கும் அவரது கணவருக்கும் இடையில் பிரச்னை என்றும் அதற்கு காரணம் நடிகையின் சகோதரர் தான் என்றும், விரைவில் விவாகரத்தே நடைபெற உள்ளது என்றும் பேச்சுக்கள் பலமாக அடிபடுகிறது.
இந்த நடிகை அவரது டீன் ஏஜிலேயே தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர். இவர் அறிமுகமான படத்திலேயே இவருக்கு என்று ரசிகர்கள் பட்டாளம் உருவாகும் அளவுக்கு ரசிகர்களை ஈர்த்திருந்தார். இது இப்படி இருக்க நடிகை படங்களில் வரும் காட்சிகளில் கிளாமராக நடிக்க வில்லை என்றாலும் பாடல்களில் கிளாமர் விருந்து வைத்து வந்தார். இப்படிப்பட்ட நடிகை மீது திரைத்துறையில் வைக்கப்பட்ட விமர்சனம் என்றால் நடிகை கொஞ்சம் ஓவர் வெயிட்டாக இருக்கிறார் என்பதுதான்.

அழகு பதுமையாக உள்ள நடிகை இப்படி ஓவர் வெயிட்டாக இருந்தால் நன்றாக இருக்காதே என்று எல்லாம் விமர்சித்துள்ளார்கள். இந்த விமர்சனங்களால் தனது உடல் எடையைக் குறைக்க நடிகை முடிவெடுத்து மருத்துவ சிகிச்சைகள் எல்லாம் மேற்கொண்டார். இதனால் நடிகை டக்கென உடல் எடையைக் குறைத்து ஏதோ அடையாளம் தெரியாதவர் போல மாறி நின்றார். நடிகை உடல் எடையைக் குறைத்த பின்னரும் அவர் மீதான விமர்சனங்கள் வேறு மாறி முன் வைக்கப்பட்டன.
நடிகையின் முடிவு: ஒரு கட்டத்தில் மன உளைச்சலுக்கே ஆளான நடிகை என்னதான் செய்வது என்று குழப்பத்தில் இருந்தபோது கொரோனா மொத்த உலகையும் முடக்கி வைக்க, நடிகைக்கும் வாய்ப்புகள் மொத்தமாக காலியானது. இனிமேல் வாய்ப்பே இல்லை என்று தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். தொழிலதிபர், பல கோடிகளுக்குச் சொந்தக்காரர், லைஃப் செட்டில் என்று நடிகை நிம்மதியாக திருமணம் செய்து கொண்டார்.
வரதட்சணை கொடுமை: ஆனால் நடிகையின் அம்மாவும் அண்ணனும் நடிகையுமே கொஞ்சம் பணத்தாசை கொண்டவர்கள். இதனால் நடிகையின் அண்ணனுக்கு திருமணம் நடந்த போது கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி, வைரம் , பணம், கார், பங்களா என வரதட்சணையாக பெரிய பணத்தை சுருட்ட பார்த்துள்ளனர். ஆனால் வரதட்சணை எதிர்பார்த்த அளவுக்கு வராததால், தனது அண்ணியை தனது அம்மாவுடன் சேர்ந்து கொடுமை செய்துள்ளார். இதனால் ஏற்பட்ட பிரச்னை, வழக்காக மாறி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
பிரச்னை இதுதானா: இப்படி இருக்கையில், தனது அண்ணனுக்கு காவல்துறை தரப்பில் நெருக்கடி வந்த போது நடிகையின் கணவர் கொஞ்சம் கூட கண்டு கொள்ளாததால், நடிகை தனது கணவருடன் தொடர்ந்து பிரச்னை செய்து வந்துள்ளார். இதனால் தற்போது இருவருக்கும் இடையில் பெரிய விரிசலே ஏற்பட்டுள்ளதால், விரைவில் இருவரும் விவாகரத்து பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக பேச்சுக்கள் அடிபடுகிறது. என்ன நடக்குமோ என விவரம் தெரிந்தவர்கள் புலம்பி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











