இந்த வருஷமும் ஏழரையை இழுத்துவிட முடிவெடுத்த நடிகை.. பக் பக் மனநிலையில் நடிகருக்கு நெருங்கிய வட்டம்!

By Staff

சென்னை: இந்த நடிகை தென்னிந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகைகளில் ஒருவராக இவர் உள்ளார். இவர் சமூக வலைதளப் பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர். இப்போதும் டாப் கதாநாயகர்கள் படத்தில் கமிட் ஆகி நடித்து வரும் அளவுக்கு மார்க்கெட் உள்ள நடிகை. இந்த நடிகை பல ஆண்டுகளாகவே நடிகர் ஒருவருடன் சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்படுகிறார். இந்நிலையில் நடிகருக்கு மிகவும் முக்கியமான காலகட்டத்தின் போது நடிகை சில அலப்பறைகளை தனது சமூக வலைதள பக்கங்களில் இழுத்துவிட்டு வருகிறார்.

அதாவது இந்த நடிகை இன்னும் மொரட்டு சிங்கிளாவே உள்ளார். சினிமாவில் பல ஆண்டுகள் அனுபவம் உள்ள நடிகை என்றாலும் இன்னும் திருமண வாழ்க்கையில் காலடி எடுத்து வைக்காமல் உள்ளார். அதுவும் இந்த நடிகை தொடக்கத்தில் அக்கட தேசத்து நடிகருடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் ஒரு கட்டத்திற்குப் பின்னர் அந்த கிசுகிசு அப்படியே அடங்கியும் விட்டது. அதன் பின்னர் உச்ச நடிகர் ஒருவருடன் நடிகை மிகவும் நெருக்கமாக இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.

Tamil Cinema Gossip Actress Who Plans To Make Some Funny Things WITH Actor

நடிகரும் நடிகையும்: அந்த கிசுகிசு இப்போது வரை உள்ளது. நெருப்பில்லாமல் புகையாது என்பதைப்போல நடிகை மற்றும் நடிகை குறித்து அவ்வப்போது யாராவது எதையாவது தெரிவித்து விடுகிறார்கள். அல்லது அந்த நடிகரும் நடிகையுமே தங்களது ரிலேஷன்ஷிப் குறித்து ரசிகர்களும் இணையவாசிகளும் பரவலாக பேச வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பது போல அவ்வப்போது அவர்களாகவே சில சேட்டைகளை செய்து விடுகிறார்கள். கடந்த ஆண்டுக்கு முன்னர் வரை இவர்களின் நெருக்கம் குறித்து பலரும் கிசுகிசுவாகவே பேசி வந்தார்கள்.

புது அலப்பறை: ஆனால் கடந்த ஆண்டில் நடிகரின் வாழ்க்கையில் முக்கியமான தருணம் குறித்து பலரும் பேசிய நிலையில், நடிகை மட்டும் எல்லாம் ஓய்ந்த பின்னர் தனியாக அட்டேன்ஷனை ஈர்த்தார். இதற்கு காரணமே கூட்டத்தில் ஒருத்தியாக தான் தெரியக் கூடாது. தனித்த ஒருவராக தெரிய வேண்டும் அப்போதுதான் இருவருக்கும் இடையிலான ரிலேஷன்ஷிப் குறித்து பலரும் பேசுவார்கள் என திட்டமிட்டுள்ளாராம். அதனால்தான் நடிகை அவ்வாறு செய்து வருகிறார் என கூறப்படுகிறது. அப்படித்தான் இந்த முறையும் ஏதோ பெரிதாக பிளான் செய்துள்ளாராம். ஆனால் நடிகருக்கு நெருக்கமானவர்கள் இந்த முறை என்ன அலப்பறையோ என புலம்பி வருகிறார்களாம். நடிகையின் அலப்பறைக்காக திரையுலகமும் காத்துக் கொண்டு இருக்கிறது எனலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X