பார்ட்டிக்கு அழைத்த நடிகர்.. அங்க வேண்டாம் வேற எங்காவது வைத்துக்கலாம் என்று மறுத்த நடிகை
சென்னை: இந்த நடிகருக்கும் நடிகைக்கும் இடையில் பல ஆண்டுகளாகவே நெருக்கம் இருக்கிறது என்று பேச்சுக்கள் இருந்தாலும், அதை இருவரும் வெளிப்படையாக தெரிவித்தது இல்லை. ஆனால் படப்பிடிப்புத் தளத்தில் இருவரும் நடந்து கொள்வதில் தொடங்கி, அடிக்கடி தனியே சந்தித்து பேசுவது என எல்லாவற்றிலும் இவர்கள் நடவடிக்கை இவர்கள் இருவருக்கும் இடையிலான உறவு குறித்த கிசுகிசுக்களை அதிகரித்தது. இப்படி இருக்கும்போது நடிகர் தற்போது தனது திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான கட்டத்தில் இருக்கிறார். இதற்காக நடக்க உள்ள நிகழ்ச்சிக்கு நடிகர், நடிகையை பர்சனலாக அழைத்துள்ளாராம். ஆனால் அதற்கு நடிகை சொன்ன காரணமும், அடுத்து அவர் சொன்ன தகவலும் தான் கோலிவுட்டில் காதும் காதும் வைத்தது போல, பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அதாவது நடிகரும் நடிகையும் ஓவர் நெருக்கம் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். நடிகரின் படப்பிடிப்புத் தளத்திற்கு முன் அறிவிப்பே இல்லாமல் சென்று, நடிகரின் கேரவனில் மணிக்கணக்காக நேரம் செலவிடும் அளவுக்கு நடிகைக்கு உரிமை உள்ளது. என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

ஏற்பாடுகள்: அதாவது நடிகர் நடிகையை சந்தித்துப் பேசும்போது, நடிகையை தனது சினிமா நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளாராம். நடிகை யோசித்துப் பார்த்துவிட்டு, நான் மட்டும் வந்தால் சரியாக இருக்காது, எனவே, மற்ற சினிமா பிரபலங்களையும் கூப்பிட்டால் யாருக்கும் சந்தேகம் வராது என்று தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட நடிகரும் அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். எல்லா ஏற்பாடுகளையும் செய்த பின்னர் நடிகை மற்றொரு காரணத்தைச் சொல்லி பார்ட்டியில் கலந்து கொள்வதில் இருந்து ஜகா வாங்கி உள்ளாராம்.
நடிகை சொன்ன காரணம்: அதாவது நடிகை வந்தால் நடிகருடன் அவர்தான் அமர வேண்டுமாம். தான் இல்லாத போது நடிகருக்கு அருகில் வேறு யாராவது அமர்ந்திருந்தால் பிரச்னை இல்லையாம். ஆனால் நடிகை இருக்கும்போது நடிகைதான் நடிகருக்கு அருகில் அமர வேண்டுமாம். இதைக் காரணமாக சொல்லி நடிகை தற்போது இந்த விஷயத்தில் இருந்து ஜகா வாங்கி விட்டாராம். மேலும் நடிகருக்கு என்று நடிகை ரொம்பவும் பர்ஷனலாக மிட் நைட் பார்ட்டி வைப்பதாக சொல்லிவிட்டாராம். நடிகை இப்படிச் சொன்ன தகவலை கேள்விப்பட்ட பலரும் இது குறித்து காதும் காதும் வைத்தபடி, கோலிவுட் வட்டாரத்தில் பேசி வருகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











