எல்லாம் ஓ.கே.. நான் சொல்ற இடத்துடல ரூம் போடுங்க.. அங்கதான் தொந்தரவு இருக்காது.. நடிகை கண்டிஷன்!
சென்னை: இந்த நடிகை கொஞ்சம் விவகாரமான நடிகைதான். சினிமாவில் காலடி எடுத்து வைத்தபோது எல்லோரிடமும் பவ்யமாக இருந்தவர். ஆனால் இப்போது ஆளாகி விட்டார் என்பதற்காக, மார்க்கெட்டில் முக்கியமான நடிகை என வளர்ந்துவிட்டதால் அவரது ஆட்டம் ரொம்ப ஓவரா இருக்குதாம். தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் பல கண்டிஷன்கள் போடுகிறாராம் இந்த நடிகை.
பக்கத்து மாநிலத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு பார்சல் செய்யப்பட்ட நடிகை தான் இவர். வந்த புதிதில் பெரிதாக சர்ச்சைகளில் எதிலும் சிக்காமல் இருந்தார். பெரிய ரெகமெண்டேஷன் இருந்ததால், பெரிய ஹீரோக்களின் படங்களிலேயே, நேரடியாக நடித்தார். வந்த புதிதில் டயட் எதுவும் ஃபாலோ செய்யாமல் இருந்த நடிகை தனது ஆரம்ப கால சினிமாக்களில் நடனக் காட்சிகளில் ரொம்ப சிரமப் பட்டுள்ளார்.

நடித்த படங்கள் ஹிட் அடிக்கத் தொடங்கியதால், நடிகைக்கு கொஞ்சம் தலைக்கனம் வர ஆரம்பித்துள்ளது. அன்று முதல் இப்போது வரை அந்த தலைக்கனம் இருக்கின்றதாம். நடிகை நடிப்பில் பேர் வாங்கியதை விட, திரையுலகில் சிம்பதியில்தான் அதிகம் பேர் வாங்கியுள்ளார். கொஞ்சம் வளர ஆரம்பித்ததும், நைட் பார்ட்டிகளுக்கு சென்ற நடிகை, அங்கு ஒரு நடிகருடன் பழக ஆரம்பித்தார்.
காதல்: அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாற, நடிகையும் நடிகரும் காதலை அனுபவித்து வளர்க்கலாம் என கமிட் ஆன படங்களின் படப்பிடிப்புகளுக்கு கூட சரியாக ஒத்துழைப்பு கொடுக்காமல் இருந்துள்ளனர். இதனால் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் மற்ற நடிகர்களும் செம கோபத்தில் இருந்துள்ளனர். காதலை ரொம்பவும் ஓவரா வளர்த்துவிட்டார்களோ என்னவோ, நடிகரும் நடிகையும் பிரிந்துவிட்டார்கள்.
சிம்பதி: ஆனால், கொஞ்ச நாட்களிலேயே நடிகை இன்னொரு நடிகருடன் அவுட்டிங், டேட்டிங், ஸ்பெஷல் மீட்டிங் என செம ஜாலியாக இருந்துள்ளார். நடிகை இப்படி செய்ய காரணம், தன்னை உதறிய நடிகரை பழி வாங்கத்தான் என நெருங்கிய வட்டத்தில் கூறியுள்ளார். ஆனால் நடிகை இரண்டாவதாக இணைந்துகொண்ட நடிகருக்கு ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது தெரிந்தும், நடிகரை தன் வசம் வைத்திருந்தார் நடிகை. அதன் பின்னர் இந்த நடிகரும் விட்டுவிட்டுபோக, நடிகை மீது செம சிம்பதி மொத்த திரையுலகத்திற்கு ஏற்பட்டுள்ளது.
ரூம் புக்கிங்: இந்த சிம்பதியை வைத்துக் கொண்டு வளம் வந்த நடிகையின் சொந்த வாழ்க்கையில்தான் கிராப் ஏறி, ஏறி இறங்கியது. ஆனால் அவரது திரை வாழ்க்கை ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டுதான் இருந்தது. இதனாலோ என்னவோ நடிகை திரைத்துறையில் ஓவர் ஆட்டம் போட ஆரம்பித்துவிட்டார். இப்போது எல்லாம் பெரிய நடிகர்களைப் போல், ஆண்டுக்கு ஒரு படம் ரிலீஸ் ஆனால் போதும் என திட்டம்போட்டு படங்களில் கமிட் ஆகி வருகிறார். மேலும் படப்பிடிப்பு எங்கு நடந்தாலும் தான் சொல்லும் ஹோட்டலில்தான் தனக்கு ரூம் புக் செய்ய வேண்டும் எனவும், அங்கு படக்குழுவினர் யாருமே தங்க கூடாது எனவும் ஓவர் கண்டிஷன் போடுகின்றாராம். தயாரிப்பாளர்களும் வேறு வழி இல்லாமல், நடிகை சொல்லும் ஹோட்டலில் அவருக்கு ரூம் புக் செய்துவிட்டு, படக்குழுவினருக்கு வேறு ஏதாவது சாதாரண ஹோட்டலில் ரூம் புக் செய்கின்றார்களாம்.


Click it and Unblock the Notifications











