நடிகையை மிரட்டிய ஆசாமி.. ஆஜரான நடிகர்.. எல்லாம் காதும் காதும் வச்ச மாதிரி நடக்குதாம்!
சென்னை: இந்த நடிகருக்கும் நடிகைக்கும் இருக்கும் உறவு குறித்து மொத்த திரை உலகத்திற்கே தெரிந்தாலும் நடிகரும் நடிகையும் இது தொடர்பாக யாருக்கும் தெரியாததைப் போல நடந்து கொண்டு வருகிறார்களாம். இவர்களின் சில்மிஷ உறவு குறித்து ஏற்கனவே ஒரு படம் வெளியாகிவிட்டது. இப்படி இருக்கையில் மர்ம ஆசாமி ஒருவர் செய்த செயலால் தற்போது நடிகரும் நடிகையும் அலார்ட் ஆகி உள்ளார்களாம்.
அதாவது நடிகைக்கு மிரட்டல் விடுத்த அந்த மர்ம ஆசாமி, பற்றாக்குறைக்கு காவல்துறைக்கும் போனைப் போட்டு இதுதான் விஷயம் முடிந்தால் தடுத்துக் கொள்ளுங்கள் என்று சவால் விட்டதாக தகவல் பரவுகிறது. இப்படி இருக்கையில் நடிகைக்கு பாதுகாப்பு கொடுக்க நடிகை இருக்கும் இடத்திற்கே சில காவலர்கள் சென்றுள்ளனர். முதலில் நடிகை தங்கி உள்ள இடத்தை நன்கு செக் செய்துள்ளனர்.
இப்படி இருக்கையில் நடிகை ஒரு கட்டத்திற்கு மேல், தான் தனியார் பாதுகாவலர்களை நியமித்துக் கொள்கிறேன், எனவே உங்கள் உதவி தேவைப்படாது என்று கூறி காவலர்களை அனுப்பி விட்டாராம். நடிகை ஏன் இப்படிச் செய்கிறார் என்று புரியாமல் காவலர்கள் வந்து விட்டார்களாம்.

நடிகரின் தீவிர யோசனை: ஆனால் காவலர்களை அனுப்பிய விவகாரத்திற்குப் பின்னர் நடிகரின் வேலை இருப்பது இப்போதுதான் வெளியே வருகிறதாம். அதாவது, நடிகைக்கு பாதுகாப்பு கொடுக்கிறேன் என்று நடிகையை நோட்டம் விடுவதற்கு தான் இவர்கள் வந்திருக்கலாம். இது நடிகருக்கு பிடிக்காத நபர்களால், விரோதிகளால் போடப்பட்ட திட்டமாக இருக்கலாம் என்று சந்தேகித்து உள்ளாராம். அதனால்தான் தனியார் காவலர்களை நியமித்து கொண்டாராம்.
நடிகரின் பங்களாவுக்கு: இப்படி இருக்கையில் நடிகர் தனக்குத் தெரிந்த டீமைத் தொடர்பு கொண்டு, நடிகை தங்கி இருந்த இடத்தில் ஏதாவது ரகசிய கேமரா போல ஏதாவது செட் செய்யப்பட்டுள்ளதா என்று சோதனை போடச் செய்துள்ளாராம். அது மட்டும் இல்லாமல் நடிகையை அடுத்த சில மாதங்களுக்கு தனது பங்களாவில் தங்கச் சொல்லிவிட்டாராம். நடிகையும் மூட்டை முடுச்சுக்களை எடுத்துக் கொண்டு நடிகரின் பங்களாவுக்கு வந்துவிட்டாராம். இந்த விவகராம் தொடர்பாக தற்போது காதும் காதும் வைத்தது படியான பேச்சு போய்க்கொண்டு உள்ளதாம்.


Click it and Unblock the Notifications











