தனிக்குடித்தனம் போக.. நடு வீட்டில் வைத்து மாமனாரை கிழித்து விட்ட நடிகை.. மானமே போச்சு!
சென்னை: இந்த நடிகர் தென்னிந்திய சினிமாவில் நல்ல மதிப்புடன் பார்க்கப்படுகிற நடிகர். இவரது வாரிசுகளும் சினிமாவில் உச்சத்தில் இருக்கிறார்கள். இப்படியானவரின் குடும்பத்தில் நடக்கும் பிரச்னைகள் குறித்த பேச்சு திரைத்துறை வட்டாரத்தை சுற்றிக் கொண்டே உள்ளது.
தனது மூத்த மகனுக்கு இந்த நடிகையை திருமணம் செய்து வைக்க இந்த நடிகருக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லையாம். ஆனாலும் மகன் ஆசைப்பட்டு விட்டார் என்ற காரணத்திற்காக ஒத்துக் கொண்டுள்ளார். தொடக்கத்தில் தனது மருமகளிடம் பெரிதாக எதுவுமே பேசாமல் தான் இந்த நடிகர் இருந்துள்ளார். பேரக் குழந்தைகளைப் பார்த்த பின்னர் மெல்ல மெல்ல மருமகளுடன் பேச ஆரம்பித்துள்ளார்.
பொது நிகழ்ச்சிகளில் எங்கு போனாலும், மகனக்ளின் புராணத்தை தான் பாடுவாரே தவிர, மருமகள் இந்த வீட்டிற்கு எந்த அளவுக்கு உறுதுணையாக உள்ளார் என ஒரு வார்த்தை பேச மாட்டாராம். இதனாலே மருமகள் நடிகைக்கு மாமனார் நடிகரைப் பார்த்தலே பிடிக்காதாம். மாமனார் ஆச்சே என்று நடிகை பல நேரங்களில் கணவருக்காக அமைதியாக இருப்பாராம்.

இப்படி இருக்கும்போது மருமகள் நடிகை குழந்தைகள் வளர்ந்து விட்டார்கள் நாம் தனிக்குடித்தனம் போகவேண்டும் எனக் கூறியுள்ளார். இதைக் கேட்டதும் மாமனார் நடிகர் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதற்கு எல்லாம் முடியாது, நீங்கள் இங்கேதான் இருக்க வேண்டும். குடும்பத்தை பிரிக்க பார்க்கிறாயா? இந்த வீட்டுக்கு என்ன குறைச்சல் என்று எல்லாம் கேட்டார் என்று கூறப்படுகிறது.
ம்ருமகள் ப்ளான்: இதனால் ஆத்திரமடைந்த மருமகள் நடிகை குழந்தைகளைக் கொண்டு போய் வெளிநாட்டில் அல்லது வெளி மாநில பள்ளிகளில் சேர்த்துவிட்டால் , எளிதாக தனிக்குடித்தனம் போய்விடலாம் என முடிவு செய்து வெளிமாநிலத்தில் தனது மகளைக் கொண்டுபோய் சேர்த்துள்ளார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத மாமனார் நடிகர் நடுவீட்டில் இது தொடர்பாக கத்தி பேசியுள்ளார். அதேபோல், மருமகள் நடிகையும் கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் கத்திக்கொண்டே இருந்துள்ளார்.
தனிக்குடித்தனம்: இருவரைம் எப்படி சமாதானப்படுத்துவது எனத் தெரியாமல் நடிகையின் கணவர், அமைதியாகவே இருந்துள்ளார். கடைசியாக அவர் தனது மனைவியின் பேச்சைக் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டார். சில ஆண்டுகள் வெளி மாநிலத்தில் தங்கிய இவர்கள், இப்போது மீண்டும் சென்னைக்கே வந்துள்ளார்கள். ஆனால் நடிகை ரொம்பவும் உறுதியாக தனது மாமனார் வீட்டிற்கு போக கூடாது என்பதில் அவ்வளவு உறுதியாக இருந்துள்ளார். இதனால் தற்போது கடற்கரை ஓரமாக வீடு ஒன்றைப் பார்த்து அங்கு குடியுள்ளாராம் நடிகை. மாமனார் ஓவராக பேசியதால் வந்த வினை இது என பலரும் பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











