நியூ இயர்க்கு பிறகு ரேட்டை ஏத்திய சாமி நடிகை.. இனி டீலிங் எல்லாம் கோடிகளில்தானாம்!

By Staff

சென்னை: நடிகைகள் என்றாலே கிசுகிசுக்களுக்கு அவர்களாகவே இடம் கொடுத்து விடுவது மட்டும் இல்லாமல், சினிமா உலகில் அவர்களைப் பற்றி எதாவது புகைந்து கொண்டே இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களும் இருக்கின்றார்கள். இதில் அவர்களுக்கு பட வாய்ப்புகளுக்காக போட்டி நிறைந்த திரை உலகில் தங்களால் ஆன பல முயற்சிகளை நடிகைகள் எடுத்து வருகின்றார்கள். இதில் அவர்களை பயன்படுத்திவிட்டு அடுத்த படத்தில் வாய்ப்பு தருகின்றேன், இந்தப் படத்தில் உன்னோட திறமைக்கு ஏற்ற கதாபாத்திரம் இல்லை எனக் கூறுபவர்கள் அதிகம்.

அப்படி இருக்கும்போது, நடிகைகள் தங்களை மிகவும் பிசியானவர்களாக காட்டிக் கொள்ள என்னவெல்லாமோ செய்கின்றார்கள் பாவம். சினிமாவுக்கு வந்தாலே அட்ஜஸ்ட்மெண்ட் இருக்கும், அதெல்லாம் சகஜம் என காதும் காதும் வைத்தபடி நடிகைகளுக்குள் இந்த விஷயத்தைப் பேசிக்கொண்டாலும், பல நடிகைகள், அவற்றையெல்லாம் கப்சிப் என எதிர்கொண்டுவிட்டு, நடிக்கின்றார்கள். சிலரோ, தங்களை எப்போதும் ரக்கடாவே காட்டிக் கொண்டு, யாரும் தங்களை பாலியல் ரீதியாக அணுகக்கூடாது என ஏதேதோ முயற்சி செய்து வருகின்றார்கள்.

tamil cinema gossip cinema gossip kollywood gossip

மேலும் படங்களில் காட்சிக்கு நெருக்கமாக நடிக்க வேண்டும் என்றாலோ, கிளாமராக நடிக்கவேண்டும் என்றாலோ, கிளாமராகவும் நெருக்கமாகவும் நடித்தால் உடனே, அந்த வாரத்திலேயே அந்த நடிகையை ஹெஸ்ட் ஹவுஸ்க்கு இயக்குநர், நடிகர் என பலரும் அழைக்கின்றார்களாம். ஆனால் இவற்றையெல்லாம் கடந்து திரையுலகில் ஒரு நடிகையாக அதுவும், இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் கவனிக்கும் இடத்திற்கு இன்றைக்கு உயர்ந்து நிற்கின்றார் சாமி நடிகை.

இவரை ஆரம்பத்தில், பலரும் உருவக்கேலி எல்லாம் செய்துள்ளார்கள். இதனை அவரே பல மேடைகளில் கூறியுள்ளார். மேலும் இன்றைக்கு திரைத்துறையில் இருக்கும் சவால்களை நெருக்கடிகளை எதிர்கொள்ள தனது நம்பிக்கையை விடவும், ரசிகர்களின் கரகோஷம்தான் எனக் கூறியுள்ளார். இப்படி இருக்கும்போது கடந்த ஆண்டு இந்த நடிகையின் நடிப்பில் இரண்டு முக்கிய படங்கள் ரிலீஸ் ஆனது. அதிலும் குறிப்பாக, ஹிந்தியில் இவரது படத்திற்கு ஏகபோக வரவேற்பு.

கிளாமர் காட்சிகளில் டைரக்டரின் கற்பனைக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு நடித்து, மிரட்டிய நடிகையின் இன்னொரு படத்திலும் செம கிளாமராக நடித்தும், நடனமாடியும் ரசிகர்களை ஃபீலிங்ஸ் அடையவைத்துவிட்டார். பொதுவாகவே நடிகைகள் என்றால் படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல், மாடலிங் செய்வதிலும் அதிக கவனம் செலுத்துவார்கள். அதற்கு காரணம், ஒரு படத்திற்காக பல நாட்கள் கால்ஷீட் கொடுத்து சிரமப்பட்டு நடித்து, கோடிகளில் சம்பளம் வாங்கவேண்டும்.

ஆனால், மாடலிங்கில் அப்படி இல்லை. நடிகைகள், ஒரு நாள் அதிகபட்சம் 3 நாட்களில் ஒரு பொருளுக்கான விளம்பரத்தில் நடித்துவிட்டு பல கோடிகளை வாங்கிவிடலாம். இதுமட்டும் இல்லாமல், ப்ரோமோசன் என எல்லாவற்றிற்கும் தனித் தனி விலை. அப்படி இருக்கும்போது, 2025ஆம் ஆண்டுக்குப் பிறகு சாமி நடிகை மிகவும் தீர்க்கமான முடிவுக்கு வந்துள்ளாராம். அதாவது, எந்த பொருளாக இருந்தாலும் சரி, குறைந்த பட்சம் ஒரு கோடி கொடுத்தால் ப்ரோமோசன் செய்வாராம், இல்லை என்றால் ப்ரோமோசனே இல்லை எனக் ரொம்பவும் ஸ்ட்ரிக்ட்டாக உள்ளாராம். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வது சரிதானே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X