இனி பச்சையா தெரியப்போகுது.. நடிகரை விடாமல் துரத்தும் நடிகை.. சினிமாவில் இருந்தே விலக போறாங்கலாம்!

By Staff

சென்னை: மிகவும் பிரபலமான நடிகை அவர். தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவிலேயே கொடிகட்டிப் பறக்கும் நடிகை. இவரது கால் ஷீட்டுக்காக பல நடிகர்களும் தயாரிப்பு நிறுவனங்களும் காத்துக் கொண்டு உள்ளார்கள். என்னதான் சினிமாவில் இவர் கொடி கட்டிப் பறந்தாலும் நடிகைக்கு, டாப் நடிகர் மீதுதான் எப்போதுமே கவனம் இருக்கின்றதாம். இப்படியான நிலையில் நடிகை தற்போது சினிமாவை விட்டே விலக முடிவு எடுத்துள்ளாராம்.

ஒரு படத்தில் இணைந்து நடித்த நடிகருக்கும் நடிகைக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளது. நடிகரின் அடுத்தடுத்த படங்களிலும் அந்த நடிகையை கமிட் செய்யச் சொல்லி நடிகர் சில நேரங்களில் சொல்ல, சில நேரங்களில் தயாரிப்பாளர்களே அந்த நடிகைதான் வேண்டும் எனக் கூறியதால், இருவரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்த கால கட்டத்தில் இருவருக்குமான பழக்கம், நெருக்கமாக மாறியுள்ளது.

tamil cinema gossip cinema gossip kolly wood gossip

இதனைத் தெரிந்து கொண்ட அந்த நடிகரின் மனைவி, நடிகரோடு சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன் பின்னர் நடிகையை தனிமையில் சந்திப்பது, வீட்டிற்கே சென்று சந்திப்பது, ஜெஸ்ட் ஹவுஸில் சந்திப்பது என செம ஜாலியாக லூட்டி அடித்துக் கொண்டு இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் நடிகரின் பெற்றோர் திட்ட, அதன் பின்னர், தனது மனைவியை அழைத்து வந்துள்ளார். அதன் பின்னர் நடிகையுடன் படங்களில் மட்டும் நடிக்காமல் இருந்தார். மற்றபடி, ரகசியமாக மீட்டிங், அவுட்டிங், கூத்து கும்மாளம் என ஜாலியாகவே இருந்துள்ளார். இது தொடர்பாக அவ்வப்போது கிசுகிசுக்கள் வந்த வண்ணம் இருந்தது.

சினிமா வேண்டாம்: இப்படியான நிலையில் அந்த நடிகர் சினிமா வேண்டாம். வேறு தொழில் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளார். அதற்கான வேலைகளையும் அந்த நடிகர் செய்து வருகின்றார். இப்படியான நிலையில் நடிகையும் சினிமா விட்டு விலகி இருக்கலாம் என முடிவெடுத்துள்ளாராம். மேலும் இது தொடர்பாக அந்த நடிகரிடமும் பேசித்தான் இந்த முடிவையே எடுத்துள்ளாராம் அந்த நடிகை.

திருமணம்: இது தொடர்பான தகவல்கள் உலா வரத் தொடங்கியதும், பலரும் பலவிதமாக பேச ஆரம்பித்துவிட்டனர். குறிப்பாக, இந்த நடிகைக்குத்தான் திருமணம் ஆகல, அதனால் இஷ்டத்துக்கு இருக்காங்க. ஆனால் அந்த நடிகருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் எல்லாம் இருக்கு. சினிமாவில் இருக்கும்போதுதான் நடிகர்தான் வேண்டும் வேறு யாரும் வேண்டவே வேண்டாம் என இருந்தீர்கள்.

பச்சையாக: இப்போது நடிகரே வேறு தொழில் பார்த்துக்கலாம் என முடிவெடுத்து அதற்கான வேலைகளில் உள்ளார். இப்போதும் அந்த நடிகரை இப்படியே துரத்துவது எங்க போய் முடியுமோ? இந்த நடிகை சினிமாவை விட்டு விலகினால் கூட பரவாயில்லை, அந்த நடிகர் பின்னால் மறுபடியும் போனால், ரகசியமாக இருந்த உறவு, பச்சையாக அனைவருக்கும் தெரிந்துவிடும் என பேசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X