அம்மா ஆன பிறகு அதிரடி முடிவெடுத்த முன்னணி நடிகை.. மார்க்கெட்டில் நின்னு விளையாட இதுதான் சரியாம்
சென்னை: சென்னை: தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி ஹீரோக்களின் முதல் சாய்ஸாக இருந்த நடிகை, திருமணத்துக்கும், குழந்தை பிறப்புக்கும் பிறகும் அதே மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அதற்காக உடலை மீண்டும் பழைய ஃபிட்னஸுக்கு கொண்டு வந்ததோடு, அடுத்த கட்ட சினிமா பயணத்துக்காகவும் அமைதியாக ஒரு முக்கியமான முடிவை எடுத்திருப்பதாக கோலிவுட் மற்றும் டோலிவுட் வட்டாரங்களில் பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.
குழந்தை பிறந்த பிறகு சில மாதங்களிலேயே கடுமையான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு என மீண்டும் கேமரா முன் நிற்கத் தயாரான அந்த நடிகை, தற்போது பகிரும் புகைப்படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. "முன்பைவிட இப்போது இன்னும் அழகாக இருக்கிறார்" என்று ரசிகர்களே பாராட்டும் அளவுக்கு தனது தோற்றத்தை முழுமையாக மாற்றியிருக்கிறார்.
சினிமாவில் அடுத்த ரவுண்டு: ஆனால் இந்த மாற்றம் தோற்றத்தில் மட்டும் இல்லையாம். சினிமாவிலும் இனிமேல் எந்த மாதிரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதிலும் பெரிய முடிவை எடுத்திருக்கிறாராம். தேவையில்லாத கிளாமர் காட்சிகளை முடிந்தவரை தவிர்த்து, குடும்பமாக உட்கார்ந்து பார்க்கக்கூடிய படங்களிலும், அதே நேரத்தில் நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கும் வலுவான கதாபாத்திரங்களிலும் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாக கூறப்படுகிறது.

ம்கனுக்காக முக்கிய முடிவு: இதற்கு காரணமும் ரொம்பவே எமோஷனல்தானாம். இன்று ஒரு நடிகையாக இருந்தாலும், வீட்டுக்கு சென்றதும் ஒரு அம்மா. நாளை மகன் வளர்ந்து தன்னுடைய படங்களை பார்க்கும் போது, "என்னோட அம்மா இப்படிப்பட்ட கதாபாத்திரங்களைத்தான் தேர்வு பண்ணியிருக்காங்க" என்று பெருமையாக சொல்ல வேண்டும் என்பதுதான் அவரது எண்ணமாம். அதனால்தான் இனிமேல் கதையை கேட்கும் விதத்திலேயே நிறைய மாற்றம் கொண்டு வந்திருக்கிறாராம்.
யோசிக்காமல் நோ சொல்லனும்: இதனால் பெரிய படங்களாக இருந்தாலும், முன்னணி ஹீரோக்களின் படங்களாக இருந்தாலும், கதாபாத்திரத்தில் திருப்தி இல்லையென்றால் தயக்கமின்றி மறுத்துவிடும் மனநிலையிலும் இருக்கிறாராம். சினிமாவில் நீண்ட காலம் நிலைத்து நிற்க வேண்டுமென்றால், இப்போதைய இந்த முடிவுதான் சரி என்று அந்த நடிகை நம்புவதாகவும், அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications